ரூ.86 கோடி!
இந்த ஹேண்ட் பேக்கின் விலை
உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன ஹேண்ட்பேக் என்ற பெருமையைத் தன்வசப்படுத்தியிருக்கிறது ஒரிஜினல் ‘பிர்கின்’ ஹேண்ட்பேக். ‘ஹெர்ம்ஸ்’ பிராண்டின் தயாரிப்பு இது.
பிரிட்டிஷ் -பிரெஞ்ச் நடிகையான ஜேன் பிர்கினுக்காக, 1984ம் வருடம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது இந்த ஹேண்ட்பேக். எண்பதுகளில் விமானத்தில் லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்தார் ஜேன். அதே விமானத்தில் ‘ஹெர்ம்ஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டுமாஸும் பயணித்தார்.
பயணத்தின்போது ஜேனின் ஹேண்ட்பேக்கில் இருந்த சில பொருட்கள் கீழே விழுந்திருக்கின்றன. பேக்கில் இடமில்லாமல் பொருட்களை அடைத்து வைத்திருந்தார் ஜேன். இதைப் பார்த்த டுமாஸ், நிறைய பொருட்களை வைக்கும் அளவுக்கு ஒரு ஹேண்ட்பேக்கை உருவாக்கித் தருவதாக ஜேனிடம் சொல்லியதோடு, தயாரிக்கப்போகும் பேக்கை ஓவியமாகவும் வரைந்து காட்டியிருக்கிறார்.
ஆனால், அந்தஹேண்ட்பேக்கிற்கு ‘பிர்கின்’ என்று உங்களின் பெயரையே வைக்கப்போகிறேன் என்று டுமாஸ் சொல்ல, அதற்கும் ஒப்புதல் தர, அடுத்த சில மாதங்களில் முதல் ‘பிர்கின்’ ஹேண்ட்பேக் உருவாக்கப்பட்டு, ஜேன் பிர்கினுக்கு வழங்கப்பட்டது. அந்த முதல் ‘பிர்கின்’ ஹேண்ட்பேக் தான் இப்போது 86 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.
த.சக்திவேல்
|