மிதக்கும் வீடு



ஒவ்வொரு வருடமும் அதிகளவில் நில நடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்று, ஜப்பான். நில நடுக்கம் மட்டுமல்லாமல், சுனாமி, எரிமலைச் சீற்றம் என பல்வேறு இயற்கைப் பேரழிவுகளால் பாதிப்புக்குள்ளாகும் நாடும் இதுவே. 
நில நடுக்கத்தின் போது உயிர்ச் சேதங்கள் மட்டுமல்லாமல், பொருட் சேதங்களும் அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக வீடுகள் முற்றிலும் சேதமடைகிறது. நில நடுக்கத்தின் போது வீட்டை இழந்தவர்கள் அதை திரும்பக் கட்டுவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.

இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த ‘ஏர் தன்ஷின்’ என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் நில நடுக்கம் ஏற்படும்போது வீட்டை நிலத்திலிருந்து சில அடிகள் மேலே தூக்கிக் கொள்ளலாம். 

இதற்காக ராட்சத பலூன்கள் பயன்படுத்தப்படுகின்றன. நில நடுக்கம் சரியான பிறகு மீண்டும் வீட்டைப் பொருத்திக் கொள்ள முடியும். இதனால் வீட்டின் சேதாரம் 100 சதவீதம் தவிர்க்கப்படுகிறது. அதாவது, நில நடுக்கத்தின்போது வீடுகள், மிதக்கும் வீடுகளாக மாறிவிடும்.

த.சக்திவேல்