அகராதியில் சேர்க்கப்பட்ட ஜென் Z / ஆல்ஃபா ஜென் சொற்கள்!
ஜென் Z மற்றும் ஜென் ஆல்ஃபா தலைமுறைகளைச் சேர்ந்த இளைஞர்கள் பேசும்போது பெரும்பாலும் வெவ்வேறு புதிய வார்த்தைகளையும், சொல் அல்லது வாக்கியத்தின் சுருக்கத்தையும் பயன்படுத்துகின்றனர். இந்த வார்த்தைகளை சமூக ஊடகங்களிலும் காணலாம் / கேட்கலாம்.  இந்த வார்த்தைகள் எங்கிருந்து வந்தன? மொழியில் இந்த மாற்றங்கள் எப்போது, எப்படி ஏற்பட்டன?ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தின் 2023ம் ஆண்டுக்கான வார்த்தையாக ‘rizz’ தேர்வானது. Charisma என்ற வார்த்தையின் குறுகிய வடிவமே rizz என்ற இந்த வார்த்தை. இதன் பொருள் கவர்தல் என்பதாகும்.  2024ம் ஆண்டில், மெரியம் வெப்ஸ்டர் அகராதியில் புதிதாக 200 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை ஜென் Z மற்றும் ஜென் ஆல்ஃபா தலைமுறையினர் பயன்படுத்தும் வார்த்தைகள்.1997 முதல் 2012 வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்தவர்கள் ஜென் Z என்றும், 2013 மற்றும் 2024 வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்தவர்கள் ஜென் ஆல்ஃபா என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இணையத்தின் வளர்ச்சி உச்சத்தில் இருந்த காலத்தில் ஜென் Z தலைமுறை வளர்ந்தது, இந்தத் தலைமுறைக்கு மொபைல் போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இல்லாத ஓர் உலகம் தெரியாது.
மிகப்பெரிய அளவில் இணையம் பயன்படுத்தப்பட்ட காலத்தில் பிறந்து வளர்ந்தவர்களே ஜென் ஆல்ஃபா தலைமுறையினர். இந்தத் தலைமுறையினரிடமிருந்து தற்போது வெவ்வேறு புதிய வார்த்தைகளைக் கேட்டு வருகிறோம்.
இவர்கள் பயன்படுத்தும் இந்த வார்த்தைகள் எழுத்து வடிவை விட பேசும்போதே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தலைமுறைக்கும் அவர்களுக்கென தனித்துவமான வார்த்தைகள் இருக்கின்றன.அப்படியானால் இப்போது பயன்பாட்டில் உள்ள இந்த வார்த்தைகள் அனைத்தும் புதிதானவையா?
இல்லை. இந்த வார்த்தைகளில் சில பழையவை, அவை மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றின் அர்த்தங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.முன்பு, சில வார்த்தைகள் குறிப்பிட்ட சில மக்களும், சமூகங்களும் மட்டுமே பயன்படுத்த வரையறுக்கப்பட்டன. அவை தற்போது அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன.
ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா பயன்படுத்தும் வார்த்தைகள்
ஜென் Z பயன்படுத்தும் பல வார்த்தைகள் ஆப்பிரிக்க - அமெரிக்க மக்கள் மற்றும் பால்புதுமையினர் சமூகங்களிலிருந்து வந்தவை. Slay, tea, we be wilding, yas queen, laps, lowkey இதுபோன்ற வார்த்தைகள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தவை.Rizz என்ற வார்த்தையை முதன்முதலில் கா செனாட் (Kai Cenat) என்ற யூடியூபர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த வார்த்தை 2022ம் ஆண்டு பிரபலமானதால் 2023ம் ஆண்டிற்கான வார்த்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஒரு நபர் மீது திடீரென ஏற்படும் வெறுப்பு உணர்வை வெளிப்படுத்த ‘ick’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை உளவியலில் இருந்து வந்தது. ஆனால், ஜென் Z தலைமுறை இதனை பிரபலமாக்கியது.
இன்ஸ்டாகிராமில் ‘Understood the Assignment’ என்ற வாக்கியத்தை பல ரீல்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதன் பொருள் ஒரு நபர் எதிர்பார்த்ததை விட ஒரு வேலையை சரியாக செய்துள்ளார் என்பதாகும். இந்த வரி அமெரிக்க ராப்பர் டே மனியின் ‘த அசைன்மென்ட்’ பாடலில் இருந்து வந்தது.
‘Sus’ என்ற வார்த்தை ‘Suspicious’ என்பதன் குறுகிய வடிவம். இந்த வார்த்தை அதே பொருளில்தான் பயன்படுத்தப்படுகின்றது. இந்த வார்த்தை ‘அமாங் அஸ்’ என்ற ஆன்லைன் விளையாட்டின் காரணமாக பிரபலமானது.
‘No Cap’ என்ற வார்த்தை நான் பொய் சொல்ல மாட்டேன், தொப்பி அணிய மாட்டேன் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சொல் ஆப்பிரிக்க -அமெரிக்க சமூகத்திலிருந்தும், தொப்பிகளை அணியும் ஹிப்-ஹாப் சமூகத்திலிருந்தும் வருகிறது. குறுகிய வடிவங்களாக மாறிய வார்த்தைகள்
சில வார்த்தைகள் புதிய வார்த்தைகளின் உருவாக்கத்தின்போது குறுகிய வடிவங்களாக மாறின. Laugh Out Loud என்ற வார்த்தையின் சுருக்கமே LOL. முந்தைய தலைமுறையினர் இதை குறுஞ்செய்திகளில் மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் தற்போதைய தலைமுறை அதை உரையாடலிலும் பயன்படுத்தத் தொடங்கியது.
வேறு சில வார்த்தைகளின் குறுகிய வடிவங்களும் பிரபல மடைந்தன.
GOAT - Greates t Of All Times Delulu - Delusional OOTD - Outfit Of The Day IRL - In Real Life NGL - Not Gonna Lie / Not Going to Lie NMH - Nodding My Head
இணையம், சமூக ஊடகங்கள் மற்றும் இளைஞர்கள் மீதான அதன் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யும் முக்தா சைதன்யா என்பவர், பல்வேறு வயது நபர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்.
இந்த இளம் தலைமுறையினர் பயன்படுத்தும் மொழியைப் பற்றி அவர் பேசுகையில், “இந்த ஜென் Z பயன்படுத்தும் மொழி கேலிக்குரியது, அவை ஆன்லைன் மீம்ஸ்களில் இருந்து வருகின்றன. ஆனால், இது திடீரென்று தோன்றவில்லை என்பதைகவனத்தில் கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் மயமாக்கலுக்குப் பிறகு பல வார்த்தைகள் உருவாக்கப்பட்டது...” என்கிறார்.“பட்டன் தொலைபேசிகளில் நாம் அனைவரும் குறுஞ்செய்திகள் அனுப்பத் தொடங்கியபோது இந்த மாற்றம் நிகழத் தொடங்கியது.
ஆரம்பத்திலேயே ஆங்கில மொழியில் சொற்களைச் சுருக்கி, அவற்றை குறுகிய வடிவங்களாக மாற்றும் முறையுடன் இது தொடங்கியது. பின்னர் மெதுவாக, காலம் மாறும்போது, தலைமுறைகளும் மாறின, ஆன்லைன் உலகின் மொழியும் மாறியது...” என்கிறார் முக்தா சைதன்யா.ரைட்டு. ஸ்டார்ட் மியூசிக் (கவுண்டமணி வாய்ஸில் படிக்கவும்)!
காம்ஸ் பாப்பா
|