70 கடந்து சாதிக்கும் இளைஞர்கள்!
சுனில் கவாஸ்கர் 72 வயதில் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றதும் மைதானத்தில் நடனமாடுகிறார். ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கபோலா தன் சொத்து முழுவதையும் விற்று 2000 கோடி ரூபாயில் தயாரித்து / இயக்கி ‘மெக்னாபோலிஸ்’ என்ற தன் கனவுப் படத்தை சென்ற வருடம் வெளியிட்டார். படம் படு தோல்வி.
 மொத்த சொத்து இழந்ததைப்பற்றி துளிக்கூட அலட்டிக்கொள்ளவில்லை. 85 வயதில் அடுத்த படத்தை இயக்குவதற்கு ஸ்கிரிப்ட்டோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஜப்பானிய எழுத்தாளரான ஹாருகி முரகாமி 76 வயதில் மராத்தான் ஓடுகிறார். சல்மான் ருஷ்டி கத்திக் குத்தில் மயிரிழையில் உயிர்தப்பி, ஒரு கண் பார்வையும் இழந்து 77 வயதில் அடுத்த நாவலை எழுதி வருகிறார்.
அமெரிக்க நடிகர் அல் பசினோ 85 வயதில் லாஸ்வேகாஸில் இளமைத் துள்ளலோடு நடனம் ஆடுகிறார். பல உடல் உபாதைகளோடு வாழும் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான ராபர்ட் டி நீரோ 83 வயதில் அடுத்த படத்தில் நடிக்க ஒத்திகை பார்க்கிறார். இளையராஜா 82 வயதில் சிம்பொனி இசைத்து, இதுதான் தொடக்கம் என்கிறார்.
வயது பொருட்டே இல்லை. உடல் உபாதைகளை லட்சியம் செய்யவில்லை. தாங்கள் தேர்வு செய்த துறையில் அதீத ஈடுபாட்டுடன் தங்களை ஒப்புக்கொண்டு உழைக்கிறார்கள். எந்த கவனச் சிதறலும் இல்லை. பேஷன்... பேஷன்.The Mind is Everything What You Think, You Become - Buddha.
வாசுதேவன்
|