கின்னஸ் திருமணம்



பெர்னி லிட்மேனின் வயது 100. மர்ஜோரி ஃபிடர்மேனின் வயது 102. சமீபத்தில் பெர்னியும், மர்ஜோரியும் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு பேரின் வயதுகளையும் கூட்டினால் 202 வருகிறது. உலகிலேயே அதிக வயதில் திருமணம் செய்துகொண்ட ஜோடி என்ற கின்னஸ் சாதனையை பெர்னியும், மர்ஜோரியும் தன்வசமாக்கியுள்ளனர்.

பிலடெல்பியாவில் உள்ள முதியோர் இல்லங்களில் இருவரும் வாழ்ந்து வந்தனர். ஒன்பது  வருடங்களுக்கு முன்பு ஒரு காஸ்ட்யூம் விருந்து நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். பிறகு அடிக்கடி சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டனர்.

கடந்த வருடம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்து, டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சமீபத்தில் முதிய வயதில் துணையின் அவசியத்தைப் பற்றி இருவரும் சேர்ந்து ஒரு நேர்காணலைத் தந்திருக்கின்றனர். அந்த நேர்காணல் டிரெண்டாக, மீண்டும் இந்த
கின்னஸ் தம்பதியினர் வைரலாகிவிட்டனர்.

த.சக்திவேல்