3 மனைவிகள்... ரூ.30 ஆயிரம் கோடி சொத்து!



அமெரிக்க அதிபராக பொறுப்பு ஏற்கும் டொனால்ட் டிரம்ப் பற்றிய சுவாரஸ்யமான 10 விஷயங்களை பார்ப்போமா?

1. நியூயார்க் மாகாணத்தில் உள்ள க்வீன்ஸ் என்ற ஊரில் 1946ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் பிறந்தார். அவரது அப்பா ஃப்ரெட் டிரம்ப் ஒரு ரியல் எஸ்டேட் உரிமையாளர். அவரது அம்மா மேரி ஆன் மாக்லியோட் ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்.

2. வீட்டில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால், 13 வயதில் டொனால்ட் டிரம்பை அவரது அப்பா ராணுவப் பள்ளியில் சேர்த்தார்.

3. டொனால்ட் டிரம்புக்கு பிடித்த விளையாட்டு கோல்ஃப். வேலை இல்லாத ஓய்வு நேரங்களில் அவர் கோல்ஃப் விளையாடச் செல்வது உண்டு. உலகின் பல்வேறு பகுதிகளில் டிரம்புக்கு சொந்தமாக 20 கோல்ஃப் மைதானங்கள் உள்ளன.

4. உடற்பயிற்சிகளுக்கு எதிரானவர் டொனால்ட் டிரம்ப். அவர் எந்த உடற்பயிற்சியையும் செய்வதில்லை. ‘நமது உடலில் உள்ள சக்தி பேட்டரியைப் போன்றது. உடற்
பயிற்சி செய்வதால், அந்த சக்தி குறைந்துவிடும்’ என்பது ட்ரம்பின் நம்பிக்கை.

5. ஃபாஸ்ட் ஃபுட் வகை உணவுகள் மீது டொனால்ட் டிரம்புக்கு விருப்பம் அதிகம். அதிலும் குறிப்பாக மெக்டொனால் ட்ஸ், பர்கர் கிங், கேஎஃ ப்சி போன்ற நிறுவனங்களில் தயாராகும் துரித உணவுகளை அவர் விரும்பி உண்பார். காலை மற்றும் மதிய நேரத்தைவிட இரவு நேரத்தில்தான் அவர் உணவுகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்.

6. அரசியலில் நுழைவதற்கு முன் டொனா ல்ட் டிரம்ப் வெற்றிகரமான பிசினஸ்மேனாக இருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப் பறந்த டிரம்ப், பின்னர் விளையாட்டு அணிகளை வாங்குவது, புத்தகங்களை பதிப்பிப்பது, தொலைக்காட்சியில் ரியாலிடி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவது என்று ஏராள
மான தொழில்களில் ஈடுபட்டார். அந்தத் துறைகளில் வெற்றியும் பெற்றார்.

7. அமெரிக்க அதிபர்களிலேயே மிகப்பெரிய பணக்காரராக டொனால்ட் டிரம்ப் இருந்துள்ளார். 2017ம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது.

8. டொ னா ல்ட் டிரம்புக்கு மொத்தம் 3 மனைவிகள். இதில் இவானா, மரியா மேப்பிள்ஸ் ஆகிய இருவரை ஏற்கெனவே விவாகரத்து செய்துள்ளார். இப்போது மெலனியா டிரம்ப் இவரது மனைவியாக இருக்கிறார்.

9. வெளிநாட்டு தலைவர்களில் டொ னால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக பிரதமர் மோடி இருக்கிறார். அவரது சமீபத்திய நெருங்கிய நண்பராக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலன் மஸ்க் உள்ளார். இந்த அதிபர் தேர்தலில் டிரம்பின் பிரசாரத்துக்கு எலன் மஸ்க் பல கோடி ரூபாய்களை செலவு செய்துள்ளார்.

10 .அமெரிக்க அதிபர் பதவியை ஏற்கும் மிக வயதான மனிதர் என்ற பெருமையும் டிரம்புக்கு உண்டு. அடுத்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவிற்கும்போது, அவரது வயது 78 ஆக இருக்கும்.

என்.ஆனந்தி