அதிசய விமானம்



பொதுவாக நீண்ட தூரப் பயணத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான், விமானம். அதுவும் குறுகிய காலத்தில் நீண்ட தூரம் செல்வதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக ஒரு விமானம் மிகக் குறைந்த தூரப் பயணத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. 
உலகிலேயே இப்படி நடப்பது இதுவே முதல் முறை. இதை அதிசய விமானம் என்று கொண்டாடுகின்றனர். ஸ்காட்லாந்தில் உள்ள ஆர்க்னி மற்றும் பாபா தீவுகளுக்கு இடையிலான தூரம் 2.73 கிலோ மீட்டர். இந்த 2.73 கிலோ மீட்டர் பயணத்துக்காக மட்டுமே இயக்கப்படுகிறது இந்த விமானம்.

 சமீபத்தில்தான் ஆர்க்னி தீவிலிருந்து பாபாவிற்குச் செல்வதற்காக இந்த விமான சேவையை ஆரம்பித்திருக்கின்றனர். இதற்காக இந்த சிறிய விமானத்தை வடிவமைத்திருக்கின்றனர். மட்டுமல்ல, உலகிலேயே வேகமான விமானமும் இதுதான். 

ஆம்; பயண தூரத்தை 1 நிமிடம், 14 விநாடிகளில் எட்டிவிடுகிறது இந்த விமானம். நல்ல திறமையான விமானிகள் 53 விநாடிகளிலே பயண தூரத்தை அடைந்துவிடுகின்றனர். இந்த விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

த.சக்திவேல்