What...உலகளவில் நம்பர் 2 புதுச்சேரியா?!



நிசமாவா... என கிள்ளிப் பார்க்க வேண்டாம். கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் அளவுக்கு இது நிஜம்.ஆம். ‘குடி’யில் அல்ல... சுற்றுலாவில் சர்வதேச அளவில் கெத்து காட்டுகிறது பாண்டிச்சேரி @ புதுச்சேரி.உலகளவில் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள், எங்கே செல்லலாம் என தேடும்போது தவறாமல் பார்ப்பது, லோன்லி பிளானட்டின் பயண வழிகாட்டிகள்தான்.

அந்தளவு பிரபலமானவை லோன்லி பிளானட்டின் பயண வழிகாட்டிகள். இந்நிலையில், 2025ம் ஆண்டு - யெஸ். அடுத்த ஆண்டு - சுற்றுலா செல்ல சிறந்த 30 பிரபலமான இடங்கள், நகரங்கள், நாடுகள் மற்றும் பிராந்தியங்களை லோன்லி பிளானட் வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் புத்தாண்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்று இதனை குறிப்பிட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு இடம் மட்டும் இடம்பிடித்துள்ளது.

அது புதுச்சேரி, அதுவும் இரண்டாம் இடம்!லோன்லி பிளானட், சமீபத்தில் 2025ம் ஆண்டிற்கான சிறந்த பயண இடங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறந்த நகரங்கள் பட்டியலில் ஃபிரான்ஸ் நாட்டின் துலூஸின் கால்வாய் கரைகள் முதல் இடத்தை பிடித்துள்ளது. அடுத்தபடியாக இந்தியாவில் புதுச்சேரி கடற்கரை 2ம் இடத்தை பிடித்துள்ளது. பல்கேரியாவின் பான்ஸ்கோ 3ம் இடம் பிடித்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தலத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இங்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புதுவை சுற்றுலா தலத்தில் ராக் கடற்கரை முதலிடத்தில் உள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சுற்றுலா பயணிகள் தேடும் முதல் மாநிலமாக புதுவை உள்ளது.
ரைட். லோன்லி பிளானட் வெளியிட்டுள்ள டாப் 10 பட்டியலை ஓர் எட்டு பார்த்து விடுவோமா?

சுற்றுலா தலங்கள்:

1. துலூஸ், ஃபிரான்ஸ்.
2.புதுச்சேரி, இந்தியா.
3.பான்ஸ்கோ, பல்கேரியா.
4.சியாங் மாய், தாய்லாந்து.
5.ஜெனோவா, இத்தாலி.
6.பிட்ஸ்பர்க், அமெரிக்கா.
7.ஒசாகா, ஜப்பான்.
8.குரிடிபா, பிரேசில்.
9.பால்மா டி மல்லோர்கா, ஸ்பெயின்.
10.எட்மண்டன், கனடா.

சிறந்த நாடுகள்:

1.கேமரூன்.
2.லிதுவேனியா.
3.பிஜி.
4.லாவோஸ்.
5.கஜகஸ்தான்.
6.பராகுவே.
7.டிரினிடாட் & டொபாகோ.
8.வனோட்டு.
9.ஸ்லோவாக்கியா.
10.ஆர்மீனியா.

சிறந்த பகுதிகள்:

1.தென் கரோலினாவின் தாழ்நிலம் மற்றும் கடற்கரை, ஜார்ஜியா, அமெரிக்கா.
2.தெராய், நேபாளம்.
3.சிரிக்கி, பனாமா.
4.லான்செஸ்டன் & தமர் பள்ளத்தாக்கு, ஆஸ்திரேலியா.
5.வாலாஸ், சுவிட்சர்லாந்து.
6.கிரேசன் & ஓர்டு, துருக்கி.
7.பவேரியா, ஜெர்மனி.
8.கிழக்கு ஆங்கிலியா, இங்கிலாந்து.
9.ஜோர்டான் பாதை.
10.மவுண்ட் ஹூட் மற்றும் கொலம்பியா ரிவர் கோர்ஜ் பகுதி, ஓரிகான், அமெரிக்கா.

என்.ஆனந்தி