சூர்யா நவீன்?



இதுதான் டாக் ஆஃப் த கோலிவுட்.நிஜமா அல்லது பொய்யா? தெரியாது. ஆனால், செய்தி இறக்கை கட்டி பறப்பது என்னவோ நிஜம்.வேறொன்றுமில்லை. ‘கங்குவா’ படத்தை முடித்திருக்கும் சூர்யா இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருக்கிறார். படத்தின் இன்ட்ரோ வீடியோவில் படு ஸ்டைலாக இருந்த சூர்யா இப்போது அதன் ஷூட்டிங்கை முடித்தும்விட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படமும் சூர்யாவின் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில் சூர்யாவின் புதிய படத்தை ‘மூடர்கூடம்’ இயக்குநர் நவீன் இயக்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. 

நவீன் இப்போது விஜய் ஆண்டனி - அருண் விஜய்யை வைத்து ‘அக்னி சிறகுகள்’ படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால், அந்தப் படம் ரிலீஸாவதில் சிக்கல் இருக்கிறது. இச்சூழலில்தான் சூர்யாவை வைத்து நவீன் படம் இயக்கப்போவதாக டாக், ஹாட் ஆக பரவுகிறது.பார்க்கலாம்.

காம்ஸ் பாப்பா