அதிர வைக்கும் ஃபிட்னஸ் ஆய்வு
‘‘இந்தியாவில் 42 சதவீத ஆண்களும், 57 சதவீத பெண்களும் உடலுக்கு எந்த வேலையும் கொடுப்பதில்லை; அதாவது எந்தவிதமான உடற்பயிற்சியும் செய்வதில்லை...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது ‘லான்செட் குளோபல் ஹெல்த்’ பத்திரிகையின் ஆய்வு. 2000ம் வருடத்தில் 22 சதவீத ஆண்களும், பெண்களும் மட்டுமே உடற்பயிற்சி செய்யாமல் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2010ம் வருடத்தில் 34 சதவீதமாக உயர்ந்தது. 2030ல் உடற்பயிற்சி செய்யாத ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்கிறது அந்த ஆய்வு.
கடந்த இருபது வருடங்களாகத்தான் இந்தியாவில் உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு வீழ்ச்சியை நோக்கிச் சென்றிருக்கிறது.
இன்னொரு பக்கம் இதே இருபது வருடங்களில்தான் சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் ரீதியான பிரச்னைகளுக்கு உள்ளாகும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என்கிறது அந்த ஆய்வு. ‘‘ஆரோக்கியமான உடல் நலத்துக்கு சீரான உணவு மற்றும் சீரான உடற்பயிற்சி அவசியம்...’’ என்கின்றனர் மருத்துவர்கள்.
த.சக்திவேல்
|