என்ன செய்கிறார் எச்.வினோத்?



இந்த வினாதான் கோலிவுட் முழுக்க சுற்றிச் சுற்றி வருகிறது. இன்னும் அழுத்திச் சொல்வதென்றால் தென்னிந்தியா முழுக்க.காரணம், அஜித்தை வைத்து தொடர்ச்சியாக இவர் இயக்கிய மூன்று படங்கள். அதில் முதல் படமான ‘நேர்கொண்ட பார்வை’ மட்டுமே இந்தியில் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்.

‘வலிமை’, ‘துணிவு’ என மற்ற இரு படங்களும் இவரது கதை, திரைக்கதையில் இயக்கப்பட்ட படங்கள்.மூன்றுமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தவை. அதிலும் ‘துணிவு’ ப்ளாக்பஸ்டர்.
எனவே அடுத்ததாக யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.

அதற்கேற்ப கமலஹாசனுடன் கைகோர்க்கப் போவதாக செய்திகள் கசிந்தன.ஆனால், மணிரத்னம் டைரக்ட் செய்யும் ‘தக் லைஃப்’ படத்தில் கமல் மும்முரமாக இருப்பதால் எச்.வினோத் என்ன செய்யப் போகிறார் என்ற வினா விஸ்வரூபம் எடுத்தது.இதற்கு விடையாக ஹீரோ பின்னால் செல்லாமல் யோகிபாபுவை வைத்து தன்னை வலுவாக நிரூபிக்கப் போகிறார் என பட்சி சொல்கிறது.பார்க்கலாம்!

காம்ஸ் பாப்பா