உலகின் சிறந்த விஸ்கி
உலகின் சிறந்த விஸ்கி என்கிற விருதினைத் தட்டி வந்திருக்கிறது இந்தியாவின் ராம்பூர் அசவா இந்திய சிங்கிள் மால்ட் விஸ்கி. அமெரிக்காவின் டல்லாஸ் நகரத்தைச் சேர்ந்த ஜான் பார்லிகார்ன் சொசைட்டி இந்த விருதினை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜான் பார்லிகார்ன் சொசைட்டி மதுபானத் துறையில் புதுமையாக விளங்கும் டிஸ்டில்லர்கள், ரைட்டர்கள், அதன் மார்க்கெட்டிங்கில் உள்ளவர்கள், டிசைனர்கள் ஆகியோருக்கு உலகளவில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.
 அந்தவகையில் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரிலிருந்து 80 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ரேடிகோ கைத்தான் நிறுவனத் தயாரிப்பான சிங்கிள் மால்ட் விஸ்கி உலகின் சிறந்த விஸ்கி எனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்ச், அமெரிக்கா, ஐரிஷ் விஸ்கிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்த விருதினைப் பெற்றுள்ளது ராம்பூர் அசவா.
ஜான் பார்லிகார்ன் சொசைட்டி என்பது உலகின் தலைசிறந்த பத்திரிகையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு ஆகும். அப்படிப்பட்டவர்கள் மதுபானத் துறையில் சிறந்து விளங்குபவர்களைத் தேர்ந்தெடுத்து ஜான் பார்லிகார்ன் விருதுகளை வழங்குகின்றனர். இதனால், அந்தத் துறையில் இது உலகளவில் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படுகிறது.
பி.கே
|