கமலுக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய்!
ஏறக்குறைய 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமலும், மணிரத்னமும் ‘தக் லைஃப்’ படம் மூலம் இணைகிறார்கள்.வெகு விரைவிலேயே ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. இதனால் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களைத் தேர்வு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார்; மணிரத்னம் படங்களில் இதுவரை நடிக்காததால் நயன்தாரா இந்தப் படத்தில் இணைய ஆர்வமாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
அடுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்ததால் மீண்டும் த்ரிஷாவையே கமலுக்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிருக்கிறது என்று ஒரு தகவல் கசிந்தது. ‘தக் லைஃப்’ படத்தில் த்ரிஷா நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இப்போது அவரும் கமலுக்கு ஜோடி இல்லை என்கிறார்கள்.
வழக்கம் போல் தனது ஃபேவரிட் ஹீரோயினான ஐஸ்வர்யா ராயைத்தான் கமலுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். மணிரத்னம் என்றதும் ஐஸ்வர்யா ராய் உடனே ஓகே சொல்லியிருக்கிறார். ஐஸ்வர்யா ராய் என்றதும் கமலும் ஓகே சொல்லிவிட்டார் என்கிறார்கள்.
காம்ஸ் பாப்பா
|