சிவப்பு எறும்பு சட்னி!



ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஒன்றிய அரசால் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அப்படியாக சிவப்பு எறும்பு சட்னிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  

அதென்ன சிவப்பு எறும்பு சட்னி?  

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் காடுகளில் சிவப்பு எறும்புகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிகள் இந்த சிவப்பு எறும்புகளைச் சேகரித்து அதில் சட்னி செய்கின்றனர். 
இந்தச் சிவப்பு எறும்புகள் சேகரிக்கப்பட்டதும் முதலில் அவை சுத்தம் செய்யப்படுகின்றன. பின்னர் உப்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய் சேர்த்து அரைத்து சட்னியாக்கி சாப்பிடுகின்றனர். இது ஒடிசாவில் மட்டுமல்ல. சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் என அருகேயுள்ள மற்ற கிழக்கு மாநிலங்களிலும் இந்தச் சட்னி பிரபலமானது.  

இந்தச் சட்னி நோய் எதிர்ப்பு சக்தியையும், சுறுசுறுப்பை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் கால்சியம், புரதம், விட்டமின்12, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

பி.கே