டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடிய தோனி!



ஐபிஎல் போட்டிக்குப் பிறகு காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட தோனி, இப்போது வீட்டில் ஓய்வு எடுக்கிறார் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
ஆனால், அவரோ யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடியிருக்கிறார். டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

துபாயை அடிப்படையாகக் கொண்ட ஹிதேஷ் சங்வி என்ற பிஸினஸ்மேன், இன்ஸ்டாகிராமில்  வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.
ஐபிஎல் போட்டியின்போது இருந்ததுபோல் அல்லாமல் மிக நீண்ட கூந்தலுடன் இந்த புகைப்படங்களில் காட்சியளிக்கிறார் தோனி. அவருடன் விளையாடும் டொனால்ட் டிரம்ப், தான் வழக்கமாக அணியும் தொப்பியை அணிந்திருக்கிறார். புகைப்படங்கள் மட்டுமின்றி தோனியும், டிரம்ப்பும் விளையாடும் ஒரு சிறு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ஹிதேஷ் சங்வி.

காம்ஸ் பாப்பா