வெத்து ஹேண்ட் பேக்தான் இப்ப ஃபேஷன்!தென் கொரியாவில் ஒரு ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் டார்லிங் ஆலியா பட் கலந்து கொண்டார்.கருப்பு நிற மினி டிரெஸ், அதில் சின்னச் சின்ன கட் அவுட் டிசைன்கள், ஸ்டூல் அளவுக்கு ஒரு ஹை ஹீல்ஸ், கையில் ஒரு குட்டி ஹேண்ட் பேக்- இப்படி கவர்ச்சிகரமாக வந்தவரை புகைப்படக்காரர்கள் க்ளிக் செய்து தள்ளிவிட்டார்கள். அப்பொழுதுதான் ஒரு விஷயம் அவர்களுக்கு உறைத்திருக்கிறது.

ஆலியா பட் கையில் இருந்த ஹேண்ட்பேக் எந்த வண்ணமும் இல்லாத ஒரு ட்ரான்ஸ்பேரன்ட் ஹேண்ட்பேக்! அதற்குள் குறைந்தபட்சம் ஒரு ஹேர்பின்னோ அல்லது லிப்ஸ்டிக்கோ கூட இல்லை. அதாவது அதுவொரு வெத்து ஹேண்ட்பேக்.இதுதான் இப்பொழுது ஃபேஷன்! தனது பிராண்டின் சர்வதேச விளம்பரத் தூதுவராக ஆலியா பட்டை நியமித்திருக்கிறது ஃபேஷன் பொருட்களுக்கு சர்வதேச அளவில் பிரபலமான குக்சி நிறுவனம்.அந்த பிராண்டின் ஹேண்ட்பேக்கைத்தான் ஆலியா பட் ஃபேஷன் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்திருந்தார்.

காம்ஸ் பாப்பா