இரவு உணவும் பேய் கனவும்
எல்லோருக்கும் இரவு தூக்கத்தில் கனவு வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால், மோசமான கனவுகள் துன்பத்தைத் தருபவை. குறிப்பாக பேய்களால் துரத்தப்படுவது அல்லது தாக்கப்படுவது போலான கனவு, எங்காவது இருட்டில் மாட்டிக் கொள்வதுபோலான கனவு, நேசித்தவர்களின் துர்மரணம் பற்றிய கனவு உள்ளிட்ட மோசமான கனவுகள் நம் தூக்கத்தை கெடுத்துவிடும்.
இதனால் பயம், பதற்றம் ஏற்பட்டு உடல்நிலையும் பாதிக்கப்படும். இப்படியான கனவுகளுக்கு இரவு உணவும் ஒரு காரணம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
குறிப்பாக, அதிக கொழுப்புள்ள உணவு மற்றும் மசாலா அயிட்ட உணவுகளை எடுக்கும்போது அஜீரணம், செரிமானப் பிரச்னைகள் ஏற்பட்டு தூக்கத்தை சீர்குலைக்கும். அப்போது மோசமான கனவுகள் அதிகரிக்கலாம் என்கின்றனர்.
இதுதவிர ஆல்கஹால், காஃபீன், அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள் உள்ளிட்டவையும் தூக்கத்திற்கு இடையூறு செய்து மோசமான கனவுகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அதனால், கால்சியம் நிறைந்த உணவுகள், வைட்டமின் பி6 உள்ள உணவுகள், ஹெர்பல் டீ உள்ளிட்டவை நல்லது என்கின்றனர்.
பி.கே.
|