காதலில் விழுந்த ராஷ்மிகா மந்தனா?
ராஷ்மிகா மந்தனா... பேரைக் கேட்டாலே இளசுகள் ஈசியாக மயங்கி விடுவர். அந்த அளவுக்கு பொண்ணுக்கு ஏகப்பட்ட ரசிகப் பெருமக்கள். அவ்வப்போது ஏதேனும் ட்ரெண்டிங்கை உருவாக்கிக் கொண்டே இருக்கும் ராஷ்மிகா மந்தனா இப்போது விஜய்யின் ‘வாரிசு’ பட வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார்.கடந்த இரண்டு மாதங்களில் ‘சீதாராமன்’, அமிதாப்பச்சன் உடன் ‘குட் பை’ எனத் தொடர் வெற்றிகளைக் கொண்டாடியவர் ஒரு பக்கம் ‘புஷ்பா இரண்டாம் பாகம்’, சித்தார்த் மல்கோத்ராவுடன் ‘மிஷன் மஜ்னு’, என மொழிவாரியாக ஒவ்வொரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தனுஷின் அடுத்த பட நாயகி எனவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இரவும் பகலுமாக நடித்துக் கொண்டிருக்கும் ராஷ்மிகா ஒரு சின்ன கேப் கிடைக்க, இப்போது மாலத்தீவில் தனது விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அங்கிருந்து தினம் தினம் விதவிதமான புகைப்படங்கள், ஹாட் போஸ்ட்கள் என வைரல் ரகமாக இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார். உடன் ரசிகர்களுக்கு சற்றே வருத்தமான பதிவும் வந்து சேர்ந்துள்ளது.
 மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றவர் தனியாகச் செல்லவில்லை என்னும் தகவல் கசிய... யாருப்பா அது கூடப் போனது... என ஆராய்ச்சிகள் இன்னொரு பக்கம் நடத்தினர். அப்போதுதான் அட்றாசக்க என ஒரு தகவல் கிடைத்திருக்கிறது!அதாவது அவரது ஆஸ்தான கெமிஸ்ட்ரி நாயகனான விஜய் தேவரகொண்டாவும் மாலத்தீவில்தான் இருக்கிறார்! போதாதா... இருவரும் சேர்ந்து ட்ரிப் அடித்திருக்கிறார்கள் என்கிறது சினிமா வட்டாரம். ஒருவேளை இருவரும் காதலிக்கிறார்களோ என லைட்டாக கிசுகிசுக்கப்பட்டும் வருகிறது.
விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா கிசுகிசுக்கப்படுவது இது முதல் முறை அல்ல. பல கட்டங்களில் பல தடவை இருவரும் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார்கள். ‘அப்படியெல்லாம் இல்லை...’ என கற்பூரம் அடித்து சத்தியம் செய்திருக்கிறார்கள். அதேபோல் இப்போதும் தனித்தனியாகத்தான் தாங்கள் விடுமுறையைக் கழிக்க வந்திருப்பதாக துண்டை விரித்து தாண்டுகிறார்கள்.
நோ இஷ்யூஸ்... டேட்டிங் செய்வதும் செய்யாமல் இருப்பதும் இவர்கள் இருவரது தனிப்பட்ட விஷயம். பட், ராஷ்மிகாவின் இந்த ஸ்டில்... மூன்று பக்கங்களுக்கு போதாதா என்ன?!
காம்ஸ் பாப்பா
|