ஆண்களைத் திட்டி மாதம் ரூ.7 லட்சம் சம்பாதிக்கும் பெண்!
ஷாக்கை குறைங்க... ஷாக்கை குறைங்க... ஆண்களைத் திட்டி, அவமானப்படுத்தி மாதத்துக்கு சராசரியாக ரூபாய் 7 லட்சம் சம்பாதிக்கிறார் லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர். இத்தனைக்கும் இவர் நாள் ஒன்றுக்கு வெறும் இரண்டு மணிநேரம்தான் வேலை பார்க்கிறார்! கலி முற்றிவிட்டது இல்லையா? எனவே மூச்சுக் காற்று, எச்சில், சிறுநீர், ஆணின் உயிரணுக்களில் நகைகள்... என விநோதமான பல விஷயங்களை ஆன்லைனில் விற்று சம்பாதிப்பவர்கள் இன்று அதிகரித்துவிட்டார்கள்.
 அந்த வகையில் இந்தப் பெண், தனது சேவையின் காரணமாக அசால்ட்டாக அப்பட்டியலில் இணைந்துவிட்டார்!தொலைபேசி, வீடியோ கால் மூலம் ஆண்களைத் தொடர்பு கொண்டு அவர்களை வசைபாடுவதுதான் இவரது வேலை!
 ஜெனிஃபர் லவ் என்ற 25 வயது பெண், லாக்டவுனுக்கு முன் ரெஸ்டாரண்ட்டில் வேலை பார்த்து வந்தார். கொரோனா முழு முடக்கத்தின் போது பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், விளையாட்டாக அவரது தோழி ஒரு யோசனையைக் கொடுத்துள்ளார்.அதன்படி ஜெனிஃபர் தனது பாதங்களின் புகைப்படங்களை இணையத்தில் விற்கத் தொடங்கினார். இரண்டு வருடங்களில் இந்தத் தொழில் ஏகபோக வரவேற்பைப் பெற, இப்போது லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார் ஜெனிஃபர்.
வெறும் 10 வினாடிகளுக்கு அவரது பாதத்தைப் பார்க்கவேண்டும் என்றால் அதற்கு £40 (3000 ரூபாய்); மூன்று நிமிட பெர்சனலைஸ்டு வீடியோக்களுக்கு £150 (13,000 ரூபாய்) கட்டணம் என வசூலிக்கிறார் ஜெனிஃபர்.இந்த மூன்று நிமிட வீடியோக்களில் அவர் பெரும்பாலும் ஆண்களைத் திட்டுவது, வம்புக்கு இழுப்பது, அவர்களை அவமானப் படுத்துவது போன்றதையே செய்கிறார். ஒரு நாளைக்கு வெறும் இரண்டு மணி நேரம்தான் இவர் வேலை பார்க்கிறார்தன்னை அவமானப்படுத்தும்படி ஆண்களாகவே முன்வந்து பணம் செலுத்தி ஜெனிஃபரிடம் பேசுகின்றனர் என்பதுதான் ஹைலைட்.
ஆமாம். ஆமாம். ஆமாம். பெண்கள் யாரும் ஜெனிஃபரிடம் பணம் கட்டி ஆண்களைத் திட்டச் சொல்லவில்லை. சாட்சாத் ஆண்களேதான் பணத்தைக் கொடுத்து தங்களைத் திட்டச் சொல்லி அதை காது குளிரக் கேட்டு மகிழ்கின்றனர்!ஜெனிஃபரின் கரியரில் ஒரே ஒரு முறை மட்டும் ஒரு பெண் பணத்தைக் கட்டி, ஓர் ஆணின் பெயரைச் சொல்லி திட்டச் சொல்லியிருக்கிறார்!இந்த இன்சிடென்ட் தவிர வேறு எப்போதும் பெண்கள் இவரைத் தொடர்பு கொள்ளவில்லை!
‘‘இப்படி நான் வேலை பார்ப்பதை அறிந்து பலரும் எதிர்ப்புகள் தெரிவித்திருக்கிறார்கள்; விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஆனால், நான் அதையெல்லாம் பொருட் படுத்துவதில்லை. விர்சிப்பவர்களா எனக்கு பணம் தருகிறார்கள்? தவிர நானாக எந்த ஆணையும் எந்தச் சூழலிலும் திட்டியதில்லை; திட்டுவதில்லை. ஆண்களாகவே பணத்தைக் கொடுத்து தங்களை வசைபாடச் சொல்கிறார்கள். அதை ஏற்று நானும் திட்டுகிறேன். இதற்காக ஊதியம் பெறுகிறேன். இதில் என்ன தவறு..? இதற்காக நான் ஏன் வருத்தப்பட வேண்டும்..?’’ நெஞ்சை நிமிர்த்திக் கேட்கிறார் ஜெனிஃபர்.
ரைட். எப்படி திட்டுவார்..?
ஒளிவுமறைவின்றி ஜெனிஃபர் சொல்வதை அப்படியே பிரசுரிக்க முடியாது! சென்சார் செய்து சொல்லலாம் என்றால் எதையும் குறிப்பிட முடியாது. எனவே &*$ .... என குறியீடாகக் குறிப்பிட்டுவிட்டு நடையைக் கட்டுவதுதான் சரி.அந்தளவுக்கு உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் இருக்கும் கெட்ட... கேடுகெட்ட... தரம்கெட்ட சொற்களைப் பயன்படுத்தியே ஆண்களைத் திட்டுகிறார். அதாவது அப்படி வசை பாடச் சொல்லி ஆண்கள் காலில் விழாத குறையாக ஜெனிஃபரிடம் கெஞ்சிக் கேட்கிறார்கள்!
‘‘இதுவரை எனது அனுபவத்தில், வெப் கேமராவில் எச்சில் துப்புவதுதான் விசித்திரமாக இருந்தது; இருக்கிறது. கேமராவில் தங்கள் முகத்தைக் காட்டி அதன்மீது எச்சில் துப்பச் சொல்லி ஆண்கள் கேட்கும்போது... அதற்கு பணமும் தரும்போது... என்னால் எப்படி மறுக்க முடியும்?’’ கேட்கிறார் ஜெனிஃபர். பதில் சொல்லத்தான் ஒருவருக்கும் வார்த்தைகள் வரவில்லை.
இந்த வேலையை - பணியை - வார இறுதியில்தான், அதுவும் முன்பே குறிப்பிட்டபடி நாள் ஒன்றுக்கு இரண்டு மணிநேரம்தான் மேற்கொள்கிறார். அந்த வகையில் மாதம் ரூ.7 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.இதற்காக ஜெனிஃபரிடம் முன்பே அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டும்! அந்த வகையில் ஒரு மாத கால்ஷீட் எப்பொழுதும் இவருக்கு ஃபுல்லாக இருக்கிறதாம்! எனில், வார நாட்களில் என்ன செய்கிறார்?
ஆஃப் த ரெக்கார்ட் என்ற வெப்கேம் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தேவையற்ற, சர்ச்சைக்குரிய கோரிக்கைகளிலிருந்து விலகி இருக்க நிறுவனம் இவருக்கு உதவுகிறது. இந்த நிறுவனம் பெண்களுக்கு தெரப்பியும் வழங்கி வருகிறது.
எல்லாம் சரி... ஜெனிஃபரின் வார இறுதி வேலை அவரது குடும்பத்தினருக்குத் தெரியுமா?
‘‘முதலில் சொல்லவில்லை. அவர்களாக பின்னர் அறிந்து கொண்டார்கள். ஆனால், எதுவும் கேட்கவில்லை; தடையும் விதிக்கவில்லை...’’ புன்னகைக்கிறார் ஜெனிஃபர்.
காம்ஸ் பாப்பா
|