கார் மன்னர்!



உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கார்களை வைத்துள்ள மனிதர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் புரூணே நாட்டு மன்னரான ஹசன்னல் போல்கியா.1967 முதல் புரூணே நாட்டை ஆண்டுவரும் இவரிடம் உள்ள மொத்த கார்களின் எண்ணிக்கை 7 ஆயிரம்!
இவர் வைத்துள்ள ஒட்டுமொத்த கார்களின் நிகர மதிப்பு மட்டும் 500 கோடி அமெரிக்க டாலர்கள்!இவருக்கு ஒரு கார் பிடித்துவிட்டால் உடனே அந்த பிராண்டில் 100 கார்களை வாங்கச் சொல்லிவிடுவாராம்! மன்னராக மட்டுமின்றி பிரதமராகவும் அவர் இருப்பதால், வசதிக்கு குறைவில்லை. அதனால் தனது உறவினர்களுக்குக்கூட அடிக்கடி கார்களை வாங்கிக் கொடுப்பாராம்.

உதாரணமாக, அவரிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு மட்டும் 475 மில்லியன் டாலர்கள் என்கிறார்கள்.இத்தனை கார்களை வைத்திருக்கும் அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா? ஜஸ்ட் மூன்றாயிரம் கோடி அமெரிக்க டாலர்கள்தான்!

காம்ஸ் பாப்பா