சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம்?



இதுதான் தெலுங்கு திரையுலகின் ஹாட் டாக்.நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை 2017ல் திருமணம் செய்தார் சமந்தா. நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் 2021ல் விவாகரத்து பெற்றார்கள்.
டைவர்ஸுக்குப் பிறகு சமந்தாவின் திரை வெற்றிகள் அதிகரித்தன. அவர் உடுத்தும் உடைகளின் அளவுகள் குறைந்தன. இப்போது இந்தியிலும் ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்தச் சூழலில் இரண்டாவது திருமணத்துக்கு அவர் தயாராகிவிட்டார் என்று செய்திகள் வருகின்றன.

மீண்டும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று அவருக்கு அறிவுரை கொடுத்திருப்பது கோவையைச் சேர்ந்த ஒரு சாமியாராம்.
இவரது சிஷ்யையாக வலம் வரும் சமந்தா, தன் குருவின் பேச்சைத் தட்டமாட்டார் என கிசுகிசுக்கிறார்கள். ஆக, விரைவில்... அதேதான்!நல்லா இருங்க!

காம்ஸ் பாப்பா