தலையில் சோலார் FAN!



‘‘வெள்ளைக்காரன் ஃப்ரிட்ஜ் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே புளியோதரையக் கண்டுபிடிச்சவன் தமிழன்...’’ என விவேக் ஒரு படத்தில் நகைச்சுவையாகக் கூறியிருப்பார் இல்லையா..? அதற்கு சாட்சியாக நடமாடுகிறார் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்த நபர்!பெயர் லாலுராம்.
வயது 77. லக்கிம்பூர் மாவட்டத்தில் வசிக்கும் இவர் தலையில் காவிநிற தலைப்பாகையும் வித்தியாசமான ஹெல்மெட்டும் அணிந்தபடி வலம் வருகிறார். இந்த ஹெல்மெட்டில் அவர் முகத்துக்கு நேராக காற்று வீசும் படியாக ஒரு மின்விசிறி பொருத்தப்பட்டிருப்பது ஹைலைட்.

அந்த மின்விசிறிக்கு மின்சாரம் வேண்டுமே? அதற்காகவே சோலார் தகடு ஒன்றையும் தன் தலையில் பொருத்திக் கொண்டிருக்கிறார்! இந்த மின்விசிறி காலையிலிருந்து மாலை வரை தன்னை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதாக பெருமையுடன் சொல்லும் லாலுராமின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

காம்ஸ் பாப்பா