வலைப்பேச்சு



@anathai - 4hBipolar anger - இது ஒரு serious health issue. சாதாரணமாக / joke ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது. சமுதாயத்தின் மீது அல்லது தனிநபர்கள் மீதான கோபம்  எனும் வித்தியாசம் எல்லாம் உணரமுடியாமல் chemical imbalance ஆல் uncontrollable ஆக வருவது. சிகிச்சை கண்டிப்பாகத் தேவை. சார்ந்தோர்கள் தயவுசெய்து கவனிக்க.

@prasannaR_ - First day school for junior. ஒரு நெகிழ்ச்சியான தருணமா இருந்திருக்க வேண்டியது ரொம்ப சாதாரணமா just another online session ஆக சுரத்தே இல்லாம முடிஞ்சுருச்சு. Frowning face. He is not even able to realise it’s a class.

@ptcv_ - மனைவியிடம் பொறுத்தருள வேண்டி வாட்சப்பில் தகவல் அனுப்பினால் மகள் வந்து ‘இதல்லாம் நேரடியா சொல்லுங்க’ என்று  அறிவுரை சொல்லுறா… காலக்கொடுமை…

@vinothpaper - ஓரளவுக்கு நல்ல ஹாஸ்டல்ல 3 வேளை  சாப்பாடோட மாசம் குறைஞ்சது 7000 ஆகுது. சென்னை மாதிரி ஊர்ல 10000 வரை ஆகும். இந்த ஹாஸ்டல் திட்டத்துல ஒரு 50% மிச்சமானாலும் மகளிருக்கு மிகப்பெரிய உதவியா இருக்கும். Women empowerment.

@SanjaiGandhi - இதுக்கு பேர்தான் யோகாவா?

@minimeens - இன்னிக்குதான் தெரிஞ்சது..!

@skpkaruna - ஏன்யா! அடி, உதை எல்லாம் ஒரு ஆக்‌ஷனா? ஆக்சுவலா கிள்ளறதுன்னு ஒண்ணு இருக்கு. போதிதர்மர் சீனா போகும் முன் இந்தியப் பெண்களின் டி.என்.ஏவில் ஏற்றிவிட்டு சென்ற கலை. மெல்லிய தோல் உள்ள சைடு உள் தொடையில் நாம எதிர்பாராத தருணத்துலே நறுக்குனு ஒரு கிள்ளு. For a few seconds you will see எமன்!

@kanapraba - கொரோனா படையெடுத்து ஒரு வருடம் கழிந்துவிட்டது. Zoom அழைப்பும் நம்மவர் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்டது.Zoom ஐத் தமிழ்ப்‘படுத்து’வதுதான் இன்னும் நடக்கவில்லை. மீதி எல்லாம் சரியாகவே நடக்கிறது.நான் அவதானித்த வகையில் Zoom இலக்கியச் சந்திப்புகள், கலந்துரையாடல்களில் ஒரு கட்டத்துக்கு மேல்தான் கண்ணயர்ந்து தூங்கும் அரிய காட்சியையும் காட்டுகிறார்கள்.ஒலி வழங்கியை (microphone) அழுத்தாமல் கடகடவென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.நான் Zoom க்குள் வந்துட்டேனா என்று கேட்கிறார்கள் Zoom செயலிக்குள் இருந்துகொண்டே.

இன்னொருவர் பேசிக்கொண்டிருக்க, ஒலி வழங்கியை நிறுத்தாமல் தட்டு முட்டுச் சாமான்களை நகர்த்தி ஒலி எழுப்புகிறார்கள்.Zoom ஏற்பாட்டாளரிடம் அந்த நிகழ்வு தொடங்கும் போதுதான் அழைத்து உள் நுழைவு விபரங்களைக் கேட்கிறார்கள்.Zoom செயலியில் கரை கண்டவர்கள் லிம்கா அல்லது கின்னஸ் சாதனைக்காகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.இதற்கெல்லாம் உச்சமாக ஒலி வழங்கியை (microphone ) நிறுத்த மறந்து போய் ‘எடியேய்! அவங்கள் கதைக்க வந்துட்டாங்களடி. வெறும் மேலோட நிக்கிறன், சேர்ட்டைத் தா...’ என்று சம்சாரம் அது மின்சாரம் படம் காட்டுகிறார்கள்!

@arattaigirl - ஆண்களுக்கு எதிராவும் குடும்ப வன்முறைகள் இருக்கும் போலவே!

@Tamil_iniyan170 - பொருளாதார ஆலோசனைக் குழுல சமூகநீதி இல்ல, தமிழர்கள் இல்லனு  சொல்றவனுங்க யாருனு பார்த்தா  போன ஆட்சியில வடநாட்டானுங்கள கூட்டிட்டு வந்து TNEBல posting கொடுத்ததை அமைதியா பொத்திட்டு பார்த்துட்டு இருந்தவனுங்கதான்!

@Surya_BornTo Win - என்னய்யா இது... சட்டமன்றத்துல ‘பெரியார்’னு எல்லாம் பேசிட்டிருக்காங்க. நாம நம்ம கட்சி ஆபீஸ்ல கூட பேசமாட்டோமே!

@jokinjey - 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வரி உயர்வால் ஒன்றிய அரசு அடைந்த லாபம் (Windfall profit), 20 லட்சம் கோடி. சங்கிகளே, இந்த கம்பி கட்டுகிற கதையை மாட்டு மூளையர்களிடம் சொல்லவும். #FuelLoot #BJPLootingIndia

@narsimp - படம் போட்டு கொஞ்ச நேரம் கழிச்சு தியேட்டர் இருட்டுல ராவி ஒக்காந்ததும் பக்கத்து சீட்டு ஆள்கிட்ட, எழுத்து போட்டு ரொம்ப நேரம் ஆச்சா, ஃபைட்டு முடிஞ்சுடுச்சா ரேஞ்சுல ஒருநாள் வெளிவேலைனு போய்ட்டு வந்தா, ஆளுநர் உரைல பாட்டு, ஃபைட்டு, லட்டு மிஸ் பண்ணிட்டேன் போலயே!

@Shahjahan R - யோகா செய்ய யாம் பாய் விரித்த தருணம்...

@athisha - அண்ணாச்சி கடையில் லிஸ்ட்டோடு... ‘தம்பி நான் வரிசையா சொல்றதெல்லாம் எடுத்துவை...’ Body language..!

@angry_birdu - மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் வாங்கிய oil bond கடனை திருப்பிச் செலுத்தத்தான் இவ்வளவு வரி வாங்குறாங்களாம். இந்த ஆண்டு அந்த கடனுக்கு செலுத்த வேண்டிய தொகை 20 ஆயிரம் கோடி. அந்த 20 ஆயிரம் கோடியை கொடுக்கத்தான் 3.5 லட்சம் கோடி வரி வசூல் பண்ணுறாங்களாம்!

@manuvirothi - எங்க #96பைசா_எங்கேடா?
தமிழ்நாட்டில் ஒருவர் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் அதில் 4 பைசா மட்டும்தான் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கிறதாம்.

@pradeepbritto1 - ஒரு ஆட்சி முடிந்தவுடன் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் மோடிக்கு அடித்த லக் போல யாருக்கும் கிடைத்தது இல்லை. பெட்ரோல் விலையை அப்படியே வைத்து வரியை ஏற்றி, பல லட்சம் கோடி வரி வாங்கியும் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியவில்லை என்பது வெட்கப்பட வேண்டியது!

@emperorever - இதுதான் அனைவருக்குமான திராவிட அரசு.  மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு 4 ஆயிரம் உதவித்தொகையும், 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகைப்  பொருட்களையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

@kusumbuonly - திரும்பவும் எங்கு பார்த்தாலும் கூட்டம். சமூக இடைவெளி எங்கும் கிடையாது.  எலாஸ்ட்டிக் லூஸ் ஆன ஜட்டி சத்தியத்துக்கு கட்டுப்பட்டு கிடப்பது மாதிரி முகத்தில மாஸ்க்.  எத கவர் செய்யணுமோ அதை கவர் செய்யாம கிடக்குது. இதுங்கள வெச்சிக்கிட்டு 3 என்ன இன்னும் 10 அலைகூட வரும்.

@ItsJokker - நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்,  முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அடங்கிய பொருளாதார ஆலோசனை சிறப்புக் குழு அமைக்கப்படும்!சங்கீஸ்: இவங்க யாருக்காவது ஊறுகாய் போடத் தெரியுமா?!

@Krishna Dvaipayana - விஜய்யிடம் எனக்கு பிடித்தது அவர் சில படங்களிலும் தனி வாழ்விலும் கண்ணாடி அணிவதே. ஒன்பதாம் வகுப்பில் என் கிளாசிலேயே  தூரப்பார்வையினால் கண்ணாடி அணிந்த முதல் ஆள் நான்தான். பதினேழு வருடங்களுக்கு முன் அதை ஒரு disability போலவே நினைத்தவர்கள் உண்டு. எனக்கு தன்னம்பிக்கை கொடுத்த சில விஷயங்களில் ஒன்று அன்றைய பெரும்பாலான மாணவ மாணவிகளின் விருப்ப நடிகராக இருந்த விஜய்யின் கண்ணாடி போட்ட படங்கள் நாளிதழ்களிலும் பாட்டுப் புத்தகங்களிலும் இருந்ததே. கமலின் தீவிர ரசிகனான நான் அந்தத் தகவலை என் கண்ணாடியை கிண்டல் செய்யும்போது எறிய ஒரு பிரம்மாஸ்திரமாகவே வைத்திருந்தேன்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கண்ணாடி என்பது அங்கிள் வயதுள்ள நபர்கள் அணிவதாகவே காட்சிப்படுத்தப்பட்டு வந்தது. எம்ஜிஆர் சாதா கண்ணாடி அணிந்த படம் நான் அன்று பார்த்ததில்லை. சிவாஜி நடு வயதில் உள்ள வக்கீலாகவோ கிழவராகவோ நடிக்கும்போது கண்ணாடி அணிந்திருப்பார். ‘முள்ளும் மலரும்' படத்தில் ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' பாட்டில் வருபவர் இளவயதினராகவே தெரியமாட்டார். ரஜினி ஆண்மையாகவும் சரத்பாபு வீக்காகவும் காட்டப்பட்டிருப்பார்கள். சிவப்பு ரோஜாக்கள் வில்லன் கமல் பெரிய கண்ணாடி அணிந்திருப்பார். பாக்யராஜ் பற்றி சொல்லவே தேவையில்லை. 90களின் இறுதியில் வெளிவந்த ‘தொடரும்’ படத்தில் அஜித் கண்ணாடி அணிந்திருந்தாலும் அவர் திருமணமான ஏதோ ஒரு எக்ஸிக்யூடிவ் வேலைக்கு செல்பவராகவே காட்டப்பட்டிருப்பார். குழந்தையும் இருக்கும் என நினைவு.

ஆனால் விஜய் கண்ணாடி அணிபவராக அறியப்பட்டிருந்தார். ‘லவ் டுடே' படத்திலும் ‘நினைத்தேன் வந்தாய்' படத்திலும் ‘மின்சாரக் கண்ணா' பிளாஷ்பேக்கிலும் கண்ணாடி அணிந்திருப்பார். கண்ணாடி அணிபவர்கள் ரொமான்டிக் இன்ட்ரஸ்டுடன் இருப்பார்கள் என்று அதற்கு முன்பு தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. சண்டைக் காட்சி உள்ள படங்கள் அதிகம் நடிக்க ஆரம்பிக்கும்போது கண்ணாடி கழற்றி விடப்பட்டது. ஆனால் கண்ணாடி இல்லாமல் கட்டை மீசையைக் குறைக்க ஆரம்பித்தபின்தான் மிக இளமையாகத் தெரிய ஆரம்பித்தார். Thanks to Vijay for normalizing the specs.