தமிழ்நாட்டு பொருளாதாரம் எவ்வளவு பெரியது?



உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர்களைக் கொண்டு ஆலோசனைக் குழு அமைக்கிறதே தமிழக அரசு, அதற்கான தேவை இருக்கிறதா என்ற கேள்வி எழலாம்.
ஒருவகையில் அதற்கான பதில் என்பது, தமிழக பொருளாதாரம் என்பது எவ்வளவு பெரியது என்பதை ஒப்பிட்டு அறிவதுதான். அதற்கான குறியீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு (Gross Domestic Product).

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் வேறு சில நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியலாம்.கூகுளில் யார் தட்டச்சு செய்தாலும் இந்த விவரங்கள் கிடைக்கும். யார் வேண்டுமானாலும் சரி பார்க்கலாம், சிந்திக்கலாம். ஒரு மாநிலம் ஆனாலும் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு பொறுப்பு அதிகம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.  இங்குள்ள தொகைகள் அனைத்தும் அமெரிக்க டாலர் மதிப்பை குறிப்பவை.

ராஜன் குறை