வைரல் டெலிவரி!
கடந்த வாரத்தில் ஒரு நாள். ஹைதராபாத்தில் கடுமையான மழை பெய்துகொண்டிருந்த அந்நாளில் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்தார் ராபின் முகேஷ். பசி அவரை வாட்ட, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தார். மழை பெய்வதால் டெலிவரி பையன் எப்படியும் தாமதமாகத் தான் வருவான் என்று நினைத்துக்கொண்டிருந்தார் ராபின். ஆனால், ஆர்டர் செய்த 20 நிமிடங்களுக்குள் உணவு வந்துவிட்டது.
 மழையைப் பொருட்படுத்தாமல் சைக்கிளிலேயே டெலிவரி செய்திருக்கிறார் அகீல் என்ற இளைஞர். பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டே பொறியியல் படித்து வருபவர் இவர். அத்துடன் அவரது குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபரும் இவரே. அகீலைப் பற்றிய விஷயங்கள் ராபினை நிலைகுலைய வைக்க, நடந்த சம்பவத்தை ஒரு டுவிட் செய்திருக்கிறார். அடுத்த சில மணி நேரங்களில் அகீலுக்கு பைக் வாங்க 73 ஆயிரம் ரூபாய் சேர்ந்துவிட்டது. இப்போது அகீல் புதிய பைக்கில் டெலிவரி செய்கிறார்.
த.சக்திவேல்
|