மொட்டை மாடியில் போன்சாய் காடு!
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சோஹன் லால், ஒரு போன்சாய் காட்டை உருவாக்கியிருக்கிறார். இந்தக் காட்டில் 40 விதமான 2,500 போன்சாய் மரங்களும் சில தாவர வகைகளும் ஜொலிக்கின்றன.ஜபல்பூரில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் இந்தக் காட்டை அவர் உருவாக்கியிருப்பதுதான் ஆச்சர்யம். மொட்டை மாடியில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய போன்சாய் காடும் இதுவே.
 மின்சார வாரியத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர் சோஹன். 40 வருடங்களுக்கு முன்பு ஒரு நாளிதழில் போன்சாய் மரங்களைப் பற்றி படித்திருக்கிறார். அப்போது இருந்தே போன்சாய் மரங்களை வளர்க்க வேண்டும் என்பது அவரது கனவு. தனது வருமானத்தில் பெரும் பகுதியை போன்சாய் மரங்களை வாங்குவதற்காகவே பயன்படுத்தியிருக்கிறார். மொட்டை மாடியில் இருக்கும் காட்டை உருவாக்க 10 வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது. கொரோனா லாக்டவுனில் இந்தக் காடுதான் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. இவரைப் பற்றி இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் டுவிட்டரில் தட்டிவிட, வைரலாகிவிட்டார் சோஹன் லால்.
த.சக்திவேல்
|