வலைப்பேச்சு



@vasantalic - மிக அழகாகக் காட்சியளித்த ராஜ் பாத் என்றழைக்கப்படும் இந்தியா கேட் அருகே பத்தாயிரம் மரங்கள் வெட்டப்பட்டு மோடிக்கான மாளிகை கட்டப்படுகிறது. குரங்கு கையில் பூமாலை போல இந்தியாவைப் பிய்த்துப் போடும் மோடி.

@kusumbuonly - ‘அமைதி, வளம், வளர்ச்சி, தூய்மை, எளிமை, அன்பு, துணிவு, கனிவு, பரிவு...’
போதும்... போதும்... ரொம்ப லெங்க்த்தா போய்க்கிட்டு இருக்கு. எழுத இடம் இல்ல!

@PuliSpeaks - எங்க காம்பவுண்ட்ல கிட்டத்தட்ட 30 பேர் Covishieldதான் போட்டாங்க. எல்லாரும் நலம். #SpreadPositivity

@narsimp - முதல்வர் துவங்கி, கிட்டத்தட்ட பெரும்பாலான அமைச்சர், எம்எல்ஏக்களும் டுவிட்டரை அதிகம் பயன்படுத்துகிறார்கள்தானே! இந்தத்தளத்தின் மூலம் அறிவதும், அறிவிப்பதும் இன்னும் அதிகமாகலாம். பார்ப்போம்...

@paramporul - அழகா வீட்டுக்கு வீடு வந்து ஆர்ப்பாட்டமில்லாம கூட்டம் சேராம கொரோனா நிவாரண நிதி டோக்கன் குடுத்துட்டுப் போறாங்க தெருவுல...முதல்வர் படம் கூட இல்லை டோக்கன்ல. கடந்த முறை ஜெயா, எடப்பாடி, ஓபிஎஸ், வேலுமணின்னு போட்டோக்கள் அச்சடிச்சு வந்த டோக்கன்கள் நினைவுக்கு வருகின்றன.

@chithradevi_91 - இணையத்தில் எல்லோரும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். உங்கள் வீடு அருகில் உயிரிழப்பு ஏற்பட்டால் வருத்தம் தெரிவிங்க. பாதுகாப்பா இருங்க. அதைவிட்டு சின்ன வயசு, இளைஞர் இறந்துட்டாங்கனு எக்ஸ்ட்ரா செய்தி பரப்பாதீங்க. இப்போதைய தேவை தன்னம்பிக்கைதான் நம்பிக்கையோடு கடப்போம்.
#IgnoreNegativity

@AravindRajaOff - எடப்பாடி கூடத்தான் டுவிட்டர் பார்த்தே நடவடிக்கை எடுத்தாரு...
என்ன நடவடிக்கை எடுத்தாரு..?
எஸ்.வி.சேகர் வீட்டுல பால் பாக்கெட் போட்டாருல..!

@moderndravid - உலகத்திலேயே ஒரே புத்திசாலி நம்ம நாட்டு நிதி அமைச்சர் மட்டும்தான்... வரியை குறைத்தால் விலை ஏறுமாம். யார்ரா நீங்கள் எல்லாம்!

@Don_Updatez - சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர் தனது உறவினர் மூலமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ரூபாய் 1 லட்சம் நன்கொடை அளித்தார்!

@SundarrajanG - பாஜக அரசுகளால் கொரோனா பெருந்தொற்று, பொருளாதாரம், அயலுறவு போன்றவற்றை ஏன் கையாளத் தெரியவில்லை? அதற்குக் காரணம் இவர்களைப் பயிற்றுவிக்கக்கூடிய ஆர்எஸ்எஸ் ஒரு கலாசார அமைப்பு. அவர்களுக்கு சாதி, மதம் போன்றவற்றைத் தவிர வேறு எதுவும் தெரியாது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!

@imKalaiVani - இன்னைக்கு எங்க கட்சில எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கிறோம்... சின்ன சண்டை கூட வராம நீங்க ரெண்டு பேரும்தான் அருள் புரியணும்...

@meenammakayal_ - துண்டுச்சீட்டுன்னு கிண்டல் பண்ணவன் பூராம் ஸ்டாலினுக்கு  வாழ்த்து சொல்லுறான்... இணக்கமா இருக்க முயற்சிக்கிறான்... இதுலருந்து என்ன தெரியுது? யாரு எப்படி கிண்டல் செஞ்சாலும் எல்லாத்தையும் சிரிச்சுகிட்டே கவனிக்காம கடந்து ஜெயிச்சிடு... அவனே திருந்தி திரும்பி வருவான்..!

@Inferno1510 - டிக்கெட் எடுக்காமல் திருட்டு ரயில் என கலைஞர்மீது பொய் அவதூறு செய்துகொண்டே இருந்தார்கள். இன்று மகளிர் / திருநங்கை இலவச பேருந்து பயணத்தை அவர் வழிவந்த அரசு தான் செய்திருக்கிறது.டிக்கெட் எதுவுமே இல்லாமல் கைபர் வழிவந்த Khyber-Bolan stock செய்வதறியாமல் வழமைபோல் இளித்துக்கொண்டே இருக்கிறது.

@FareethS - என்னாயா ஆளுநர் மாளிகைல தமிழ்த் தாய் வாழ்த்து எல்லாம் பாடுறாங்க...

@Shobana Narayanan - வார் ரூம் ஒன்றை கட்டமைப்பதற்கான அரசாணையை இன்று வாசித்தேன். அதில் social media surveillance team என ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. @104_GoTN என்ற டுவிட்டர் இணைப்பின் மூலம்  மருந்துகள், ஆக்சிஜன் தேவைகளை கண்காணித்து ஒருங்கிணைப்பதற்கான டீம் அது.

டுவிட்டரில் தன் வீட்டில் யாருக்கோ ஆக்சிஜன் கேட்ட பையன் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்த உத்தரப்பிரதேச முதல்வர் ஒரு நிமிடம் நினைவில் வந்து போனார்.சே... குளுமையான நேரத்தில கொரங்க நினைக்காத என்னும் என் பாட்டியின் வசனத்தை சொல்லி மனதை மாற்றிக்கொண்டேன்!

@Lakshmanasamy Odiyen Rangasamy - கோவிட் வார் ரூமின் செயல் அலகுகளையும், அதன் செயல் வடிவத்துக்கான ஆர்கனோகிராமையும் அற்புதமாக  வடிவமைத்திருக்கிறது சுகாதாரத் துறை.

* Overall coordination
* Bed management  G & P
* Oxygen management  G & P
* Field inspection G & P
* Triage and response team
முழு ஒருங்கிணைப்பையும் அகமது IAS  பார்க்கிறார். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டிய ஆக்சிஜனை முறைப்படுத்தி வழங்கவும், மேலாண்மை செய்யவும் நந்தகுமார் IAS நியமிக்கப்பட்டிருக்கிறார்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகளை முகமை செய்வதற்கென்றே தனி அலுவலர் உமா IAS  நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கோவிட் மருத்துவமனைகளை நிர்வாகம் செய்ய கார்த்திகேயன்  IAS நியமிக்கப்பட்டிருக்கிறார்இது போக நோயாளிகளின் தன்மைக்கேற்ப அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை மையத்தைப் பரிந்துரைக்கும் அணி இவர்களோடு இயங்குகிறது. இதில் சின்னச் சின்ன இடறல்கள் இருக்கலாம்; ஆனால் இது வெல்லும் சூத்திரம்.இந்த வார் ரூமைத்தான் கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். மீளட்டும் தமிழகம்

@thoatta - 10 லட்ச ரூபாய்க்கு கோட்டு, 2 லட்ச ரூபாய்க்கு கூலிங் க்ளாஸெல்லாம் போட்டுட்டு 13000 கோடிக்கு வீடு கூட கட்டலன்னா எங்களுக்கு என்ன மரியாதை?

@Vinayaga Murugan - முதல்வர், துணை முதல்வர்னு இரண்டு பதவி இருக்கறப்ப எதிர்க்கட்சித்தலைவர், துணை எதிர்க்கட்சித்தலைவர்னு இரண்டு பதவி ஏன் இருக்கக்கூடாது? அப்படி இருந்தா எதுக்கு தர்மயுத்தம் வரப்போகுது?

@mosesrajblit - உத்தரப்பிரதேச தலைநகர் எது?
பொள்ளாச்சி சார்!

@thoatta - 10 லட்ச ரூபாய்க்கு கோட்டு, 2 லட்ச ரூபாய்க்கு கூலிங் க்ளாஸெல்லாம் போட்டுட்டு 13000 கோடிக்கு வீடு கூட கட்டலன்னா எங்களுக்கு என்ன மரியாதை?

@இரா. முருகவேள் - வாலில் தீ வைப்பது என்றால் என்ன?
பிஜேபி அரசு சென்ற ஆண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த Foreign Contribution (Regulation) Amendment Act, 2020 என்ற சட்டம் கொண்டு வந்தது.

இதன்படி, வெளிநாட்டில் இருந்து பணம் மற்றும் கருவிகள் பெற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தியாவில் பல மருத்துவமனைகள் டிரஸ்ட் ஆக இயங்குபவை. இவையும் தொண்டு நிறுவனங்கள்தான்.  உதாரணமாக  கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை போன்றவை.  
சமூக நெருக்கடிகளைக் குறைக்க முதலாளிகள் தங்கள் லாபத்தில் ஒரு சிறு பகுதியை இதுபோன்ற சேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். பல கோயில்களும் மடங்களும் கூட இவ்வாறு சேவை அமைப்புகள் நடத்தி வருகின்றனர். இதற்கும் பன்னாட்டு மூலதனம் தனக்குத் தேவையான கோட்பாடுகளை இங்கே நிறுவனங்கள் வைத்துப் பரப்புரை செய்வதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது.

இந்தக் கொரோனா வெடிப்பின்போது அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாகத் தொண்டு நிறுவனங்களாக இயங்கும் மருத்துவமனைகளும் கருவிகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக அரசின் தொலை நோக்கு இல்லாத பார்வைக்கு இதெல்லாம் உதாரணங்கள். தொண்டு நிறுவனங்கள் மதம் மாற்றுவதைத் தடுத்தே ஆக வேண்டும் என்றால் அதைச் செய்ய வேண்டும்.

அரசு செய்யவேண்டிய பணிகளைத் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது படுமோசமானது. தொண்டு நிறுவனங்கள் லாபிகளை ஏற்படுத்தி அரசியலில் தலையிடுவதைத் தடுக்க அரசுக்கு உரிமை உள்ளது. ஆனால், எந்த தொண்டு நிறுவனம் என்ன செய்கிறது என்று தெரிந்து கொள்ளாமல் எல்லாவற்றுக்கும் மொத்தமாகத் தடை விதிப்பது எந்த வகையில் வரும் என்று தெரியவில்லை?

மருத்துவக் கருவிகள் வாங்க கட்டுப்பாடு விதிக்கும் நேரமா இது?
இந்நேரம் இந்தத் தடைகளைத் தற்காலிகமாகவாவது நீக்கி இருக்க வேண்டுமா? வேண்டாமா?

@Athisha Vinod - ஆங்ங்ங்... நீங்களும் கட்சிலருந்து விலகுறீங்களா...ப்ரோ நான் வாட்டர்கேன் டெலிவரி பண்ண
வந்தேன்... - ஆழ்வார்பேட்டையில் இன்று

@sridhar_says - துர்கா கோயில் கோயிலா வேண்டியதால் ஸ்டாலின் முதல்வர் ஆனாரு.
எடப்பாடி வீட்டுல மட்டும் என்ன தோத்துப் போகணும்னாடா வேண்டுனாய்ங்க..?

@skpkaruna - என்னடா இது?
பில்லர் ணே... அப்ப என் எலக்ட்ரிகல் போஸ்ட் எங்கே?
அதாணே இது..!

@PeterAlphonse7 - உலகின் 99% நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசியை இலவசமாகவே வழங்குகின்றன. இன்று உலகிலேயே மிக அதிக விலையில் தடுப்பு ஊசி விற்கப்படுவது இந்தியாவில்தான்($12-$17). அந்த விலை கொடுத்தாலும் பலருக்கு 2வது முறை ஊசி கிடைக்கவில்லை. மக்கள் நலம் நாடுகின்ற நமது பிரதமர் நீடூழி வாழ்க!

@Karuppu Neelakandan - உண்மையிலேயே போர்க்கால அடிப்படையிலான மருத்துவப் பணியைத் துரிதப்படுத்தி மக்களை மீட்கிறார் முதல்வர் ஸ்டாலின் என நன்னம்பிக்கையான செய்திகளைத் தன்னார்வப் பணியில் ஈடுபட்டு வரும்  நண்பர்கள் பலரும் தகவல் தருகின்றனர்.

ஏழாம் தேதி அளவில் ராஜீவ் காந்தி மருத்துவமனையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவு வரை நீண்டிருநத வாகனங்கள், தற்போது வெறும் நான்கைந்தாக மட்டுமே குறைந்துள்ளது என மருத்துவமனையிலிருந்து நண்பர்  விஜயபாஸ்கர் சொல்கிறார்.சூரிய ஒளியில் மீள்கிறது சென்னை. இன்று தமிழக அளவிற்கான மாவட்ட வாரியாக மக்களை மீட்கும் முயற்சிக்கான அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
நம்பிக்கை தரும் செய்திகள்.. !மீண்டெழுவோம் நண்பர்களே..வெல்லும் திராவிடம்