22 ஆயிரம் பேருக்கு உணவு!



கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் உணவு கிடைக்காமல் பசியில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த  ஹர்ஷ் மண்டாவியா என்ற இளைஞர் தனது அம்மா ஹீனாவுடன் இணைந்து 22 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கியிருக்கிறார். அதுவும் இலவசமாக.

ஹர்ஷிற்கு 5 வயதாக இருந்தபோதே தந்தை இறந்துவிட்டார். மகனைப் படிக்க வைப்பதற்காக வீட்டிலேயே சமைத்து, தெருத் தெருவாக உணவை எடுத்துச்சென்று விற்பனை செய்திருக்கிறார் ஹீனா. விற்பனை நன்றாகப் போக, சிலரின் உதவியுடன் சிறிய அளவில் ஒரு ஹோட்டலைத் தொடங்கினார். அது மும்பையின் முக்கிய உணவமாக இன்று வளர்ந்திருக்கிறது.

கொரோனாவின் முதல் அலையின்போது ஹர்ஷின் உணவகத்துக்கு வருகை தந்த வாடிக்கையாளர் ஒருவர், பசியில் வாடும் 100 பேருக்கு உணவு கேட்டிருக்கிறார். உடனே அம்மாவும் மகனும் சேர்ந்து இலவசமாக உணவைத் தயார் செய்து தந்திருக்கின்றனர். அன்றிலிருந்து இந்த சேவை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

த.சக்திவேல்