த கிரேட் இந்தியன் போஸ்ட்மேன்!
தபால் துறையில் 1985ல் சேர்ந்தார் சிவன். 2020ல் பணி ஓய்வு பெற்றார்.
இவரது 35 வருட பணி வாழ்க்கை எப்படி கழிந்தது? தன் வீடு இருக்கும் குன்னூரில் இருந்து ஹில் க்ரோவ் தபால் நிலையத்துக்குச் செல்ல 4 கிமீ பஸ் பயணம். அடுத்த 6 கிமீ டீ எஸ்டேட்கள் வழியே நடைபயணம் என்று தபால் ஆபீசுக்கு செல்வார். கொடுக்க வேண்டிய கடிதங்கள், மணி ஆர்டர்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஆழமான ஆறு, அடர்த்தியான காடு, இருட்டு மலைக்குகைக்குள் நடந்து சென்று மக்களுக்கு சேர்ப்பிப்பார்.
பென்ஷனுக்காக / மணி ஆர்டருக்காக / கடிதங்களுக்காக காத்திருக்கும் பணியாளர்கள் ஏமாற்றமடைந்து விடக்கூடாது என்று 15 கிமீ சாலை வசதி இல்லாத மலைப் பாதைகளில் ஆபத்தான விலங்குகள் நடமாட்டத்துக்கு மத்தியில் தன் பணியை காதலித்து செய்திருக்கிறார். ஒரு முறை பென்ஷன் வாங்கும் பணியாளர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட... சொந்த செலவில் பயணம் செய்து மருத்துவமனைக்கே போய் பணத்தைக் கொடுத்திருக்கிறார்! இவரைப் பற்றி ஒரு டாக்குமெண்டரி வெளிவந்திருக்கிறது.
காம்ஸ் பாப்பா
|