மணிப்பூரின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர்!
எட்டு வருடங்களுக்கு முன், மணிப்பூரில் வசிக்கும் லாபியின் கணவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையானார்.
குழந்தைகளைப் படிக்க வைக்க என்ன செய்வது? யோசித்த லாபி, ஆட்டோ ஓட்ட முடிவு செய்தார். ‘ஒரு பெண் ஆட்டோ ஓட்டக் கூடாது...’ என எதிர்ப்புகள் கிளம்பின. லாபி எதையும் பொருட்படுத்தவில்லை. குழந்தைகளைப் படிக்க வைக்க ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தார். இவரைப்பற்றி அறிந்த மீனா லொஞ்சன் என்பவர் நேரில் வந்து லாபியை சந்தித்தார். லாபி குறித்து ஆவணப்படம் எடுத்தார்.
அப்படம் தேசிய விருதைப் பெறவே, அனைவரின் கவனமும் லாபியின் மீது குவிந்தது. விஷயம் இதுவல்ல. இந்த லேடி மாணிக் பாட்ஷா இப்பொழுது செய்திருப்பதுதான் ஹைலைட். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமான நர்ஸ் ஒருவரை இம்பால் நகரில் இருந்து காம்ஜாங்க் வரை அழைத்துச் செல்ல எந்த டாக்சி ஓட்டுனர்களும் முன்வரவில்லை.இந்நிலையில் அந்த நர்ஸை தன் ஆட்டோவில் ஏற்றி 140 கிமீ இரவில் பயணம் செய்திருக்கிறார் லாபி! இச்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக, மணிப்பூர் முதல்வர் இவருக்கு ரூ.1.1 லட்சம் பரிசளித்துள்ளார்.
காம்ஸ் பாப்பா
|