அபகரன்



ஆக்‌ஷனும் க்ரைமும் கலந்த இந்திப் படம், ‘அபகரன்’. ‘ஹாட்ஸ்டாரில்’ காணக்கிடைக்கிறது. அஜய்க்கு போலீஸாக வேண்டும் என்பது கனவு. இப்போது எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறான். அவனுடைய அப்பா ஆசிரியராக இருந்தவர். காந்தியைப் பின்பற்றி சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கண்டிப்பான ஒழுக்கவாதி. மகனும் தன்னைப்போலவே சமூக செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என நினைப்பவர். ஆனால், மகனோ அப்பாவுக்கு எதிரான கொள்கைவாதி.

பெரிய அதிகாரி களுக்கு லஞ்சம் கொடுத்து போலீஸ் ஆகத் திட்டமிடுகிறான் அஜய். லஞ்சம் கொடுப்பதற்காக கடன் வாங்கு கிறான். மகனின் சட்டவிரோத செயல் அப்பாவுக்குத் தெரியவர பிரச்னை வெடிக்கிறது. அஜய்யின் திட்டம் நிறைவேறுவதில்லை. கடனைத் திருப்பித் தருவதற்காக ஒரு அரசாங்க அதிகாரியைக் கடத்த முயல்கிறான் அஜய். அந்தக் கடத்தல் முயற்சி அஜய் யின் வாழ்க்கையை எப்படி தலைகீழாக புரட்டிப்போடுகிறது என்பதே திரைக்கதை.

அப்பா- மகன் முரண்பாட்டுக்கு நடுவில்  கடத்தல் தொழிலின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்தப் படம். அஜய்யாக அஜய் தேவ்கனும் அரசியல்வாதி மற்றும் தாதாவாக நானா படேகரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். பிரகாஷ் ஜா, இயக்கியிருக்கிறார்.