வக்கீல் சாப்
இந்தியில் மெகா ஹிட் அடித்த ‘பிங்க்’, தமிழில் பம்பர் ஹிட் அடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படங்களின் தெலுங்கு ரீமேக்தான் ‘வக்கீல் சாப்’. இந்த வருடத்தில் அதிக வசூலைக் குவித்த தெலுங்குப் படம் இதுவே. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. பல்லவி, ஜரீனா, திவ்யா ஆகிய மூவரும் ஒரே வீட்டில் வசித்து, வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். ஒரு நாள் இரவில் மூவரும் பயணித்துக் கொண்டிருந்த டாக்ஸி பழுதாகிவிடுகிறது.
அப்போது அந்த வழியாக சொகுசு காரில் வரும் பல்லவியின் நண்பன் லிஃப்ட் தருகிறான். கார் ஒரு ரெசார்ட்டுக்குச் செல்கிறது. தன்னை தற்காத்துக்கொள்ளும் நோக்கில் பல்லவி வம்சியை பலமாகத் தாக்கிவிடுகிறாள். எம்பியின் மகன் வம்சி. அதற்குப் பிறகு பல்லவி மிரட்டப்படுகிறாள். ஜரீனாவுக்கு வேலை போகிறது.
வம்சிக்கு எதிராக வழக்குத் தொடுக்கிறார்கள். மூவரின் மீதும் பாலியல் தொழில் மற்றும் கொலை முயற்சி வழக்குத் தொடுக்கிறான் வம்சி. மூன்று பெண்களுக்காக வாதாட வருகிறார் வக்கீல் சத்யதேவ். தெலுங்குக்கே உண்டான மசாலா கலந்து கொடுத்திருப்பது சிறப்பு. சத்யதேவாக அதகளம் செய்திருக்கிறார் பவன் கல்யாண். படத்தின் இயக்குநர் வேணு ஸ்ரீராம்.
|