மிதக்கும் மொபைல் ஷோரூம்!



அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் ஸ்கைஸ்கிராப்பர் கட்டடங்களுக்கும் பெயர் போன ஓர் இடம் சிங்கப்பூரின் மெரினா பே.

அதற்கு இப்போது மகுடம் சூட்டுவதைப் போல தண்ணீரில் மிதக்கும் பிரமாண்ட ஷோரூமைத் திறந்துள்ளது ‘ஆப்பிள்’ நிறுவனம். உலகின் முதல் மிதக்கும் ஷோரூம் இதுதான். பண்டைய ரோம் நகரில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களை மாடலாக வைத்து இந்த ஷோரூமை வடிவமைத்திருக்கிறது ‘ஃபோஸ்டர் ப்ளஸ் பார்ட்னர்ஸ்’ என்ற புகழ்பெற்ற கட்டடக்கலை நிறுவனம்.

முழுக்க முழுக்க கண்ணாடியால் கட்டப்பட்டிருந்தாலும் வெப்பம் உள்ளே புகாத மாதிரி புது டெக்னாலஜியைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.  கொரோனாவைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் கடையின் திறப்புவிழாவிற்கு வந்தது, பல மணி நேரமாக வரிசையில் காத்திருந்தது ஹைலைட். கடைக்கு வெளியே நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். உள்ளே கேமராவுக்கு அனுமதியில்லை. இருந்தாலும் கடையைச் சுற்றிப்பார்க்க மக்கள் கூட்டம் அள்ளுகிறது.

த.சக்திவேல்