கும்பகர்ணி?



‘‘இவன் செம வாலு. வீட்டுக்கு போனாலே அவனோட லூட்டிதான். என்னைப் பார்த்த செகண்ட்லயே அவன் என் கையில் வந்து ஒட்டி உட்காருவான். அப்படி ஒரு பாசம். என் லைஃபை அவன் ரொம்பவும் முக்கியமானதா ஆக்குவான்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல. அவனைப் பார்த்தா போதும். அந்த செகண்ட்ல என்னோட எனர்ஜி பூஸ்ட் அப் ஆகிடும்...’’ ஏகப்பட்ட பில்டப்புகளும், கொஞ்சல்ஸுமாக உருகி மகிழ்கிறார் நந்திதா ஸ்வேதா.

‘‘யாரந்த அதிர்ஷ்டசாலி பையன்?’’ என கேள்வியை வீசினால், ‘‘இவன்தான் அவன்’’ என பொசுக் பொசுக்கென புஷ்டியாக இருக்கும் ஒரு பூனைக்குட்டியைக் காட்டி புன்னகைக்கிறார். பிரபுதேவாவின் ‘தேவி 2’வுக்குப் பிறகு அரவிந்த்சாமியுடன் ‘வணங்காமுடி’, ரஃப் அண்ட் டஃப் போலீஸாக ‘ஐபிசி 376’, சிபியுடன் ‘கபடதாரி’ என அடுத்தடுத்த ஷெட்யூல்களை முடிக்க ரெடியாகி விட்டார்.  எப்படியிருக்கு உங்க
ட்ராவல்..?

நடிக்கற ஒவ்வொரு படமும் பிடிச்சுதான் பண்றேன். 2018 புத்தாண்டு சபதமா, இனி ஏற்கெனவே பண்ணின கேரக்டர்களை திரும்பவும் பண்ணக்கூடாதுனு ஒரு தீர்மானம் எடுத்தேன். அதிலிருந்து அந்த ரெசல்யூஷனை ஃபாலோ பண்ணவும் ஆரம்பிச்சிட்டேன்.
எனக்கு பிடிச்சிருந்தா மட்டும் நடிச்சா போதும்னு இருக்கேன். கால்ஷீட் ஃப்ரீயா இருக்குதுனு சொல்லி, அதை காசு பண்ண விரும்பல.
ஸ்கிரிப்ட் பிடிச்சிருந்து, அது படமா வந்தால் தியேட்டருக்கு ரிபீட் ஆடியன்ஸ் வருவாங்கனு தோணுற கதைகள்லதான் நடிக்கறேன். நடிக்கவும் விரும்புறேன்.

ஏன்னா ஒரு படம் ஓடுறதும் ஓடாததும் ஆடியன்ஸ் கைகள்லதானே இருக்கு..? படம் ஓடினா நாம ஸ்டார். இல்லேனா அடுத்து ட்ரை பண்ண வேண்டி
யதுதான். நான் ஸ்டார் ஆகணும்னு நினைக்கல. ஒரு நடிகையா நல்ல படங்கள் பண்ணணும், ஆக்ட்டிங்ல அடுத்தடுத்த கட்டங்களுக்கு போகணும்னுதான் விரும்புறேன்.

த்ரில்லர், காமெடினு ட்ரை பண்ணிட்டேன். வில்லேஜ் ரோல்களும் நிறைய பண்ணியிருக்கேன். அம்மன் ஆக ஒரு படத்திலாவது நடிச்சிடணும்னு ஆசையிருக்கு. பக்திப் பட ஜானர் வந்து ரொம்ப நாளாச்சே! இந்த டைம்ல பக்திப் படங்கள் வந்தா நல்லாதானே இருக்கும்!
உங்களப் பத்தின ஒரு சீக்ரெட் சொல்லுங்க?

சீக்ரெட்னு சொல்லிட முடியாது. ஐ ஹேட் பப் அண்ட் பார்ட்டி. பிடிக்கவே பிடிக்காது. பார்ட்டி சத்தம், அந்த கூட்டம் எல்லாமே அலர்ஜி.
என் ஃப்ரெண்ட்ஸுங்க கூட, ‘இண்டஸ்ட்ரீல இருக்கே. பார்ட்டிக்கு போக மாட்டேன், பிடிக்காதுனு சொல்றியே’னு வறுத்தெடுப்பாங்க. நமக்கு பிடிக்கலைனா, பிடிக்கலைதானே...

ஷூட்டிங் இல்லேனா வீட்ல தூங்க ரொம்ப பிடிக்கும். தூக்கம்னா, சாதாரண தூக்கமில்ல. கும்பகர்ணன் மாதிரி. ஆமா, நான்ஸ்டாப் ஸ்லீப்.
வீட்ல ஒருநாள் காலையில அம்மாகிட்ட சொன்னேன். ‘எனக்கு தூக்கம் வருது. தொந்தரவு பண்ணி எழுப்பிடாதே’னு சொல்லிட்டு தூங்கப் போனேன். அதான் தெரியும். அப்புறம் மறுநாள் காலைலதான் எழுந்தேன்! வீட்ல யாரும் ஷாக் ஆகல. ஏன்னா, இது அடிக்கடி நடக்கற விஷயம்!
என்னோட ரெக்கார்டை நானே முறியடிக்கவும் செய்திருக்கேன். ஒருதடவை தொடர்ந்து 31 மணி நேரம் தூங்கிட்டேன்! ஆனா, இந்த லாக்டவுன் சீஸன்ல அப்படியெல்லாம் தூங்கல.

ஸ்போர்ட்ஸ்ல இன்ட்ரஸ்ட் உண்டு. பேட்மின்டன் பிடிக்கும். யோகா பிடிக்கும். அதுவும் யோகா ஆரம்பிச்ச டைம்ல ரொம்பவும் கடினமா உணர்ந்தேன். அப்புறம் ஒரு சவாலா எடுத்து பண்ண ஆரம்பிச்சேன். இப்ப என்னோட ஒர்க் அவுட்ல யோகாவுக்கு நிறைய ஸ்பேஸ் உண்டு.
ரொம்ப நாள் டவுட்.. அதென்ன நந்திதா ஸ்வேதா..?

ஒரிஜினல் பெயர் ஸ்வேதா. கன்னடத்தில் நான் அறிமுகமான ‘நந்தா லவ்ஸ் நந்திதா’வில் இருந்து நந்திதா ஆகிட்டேன். அந்தப் படத்துல இருந்து எல்லாரும் என்னை ‘நந்திதா’னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கும் அந்தப் பெயர் லக்கியா ஒர்க் அவுட் ஆனதால, அந்தப் பெயரையே வச்சுக்கிட்டேன்.

இப்ப என்னை யார் ‘நந்திதா’னு கூப்பிட்டாலும் சட்டுனு நாம ஒரு ஆக்ட்ரஸ்னு ஆட்டோமெடிக்கா ஒரு எனர்ஜி வந்துடுது. இன்னொரு விஷயம், இங்கே நந்திதா ராஜ், நந்திதா தாஸ்னு நடிகைகள் இருக்கறதால பெயர்க் குழப்பம் வந்திடக்கூடாதுனு நினைச்சேன். ஸோ, நந்திதாவோட என் ரியல் நேமையும் சேர்த்துக்கிட்டேன்.

தமிழில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ல இருந்து எல்லாரும் என்னை குமுதானு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. அந்தப் படம் வந்து பல வருஷம் ஆச்சு. ஆனா, இன்னமும் அவுட்டோர் ஷூட்டிங்கில் என்னைப் பார்க்கறவங்க ‘குமுதா’னு சொல்லித்தான் கூப்பிடறாங்க.
அதேபோல தெலுங்கில் ஒரு படத்துல என்னோட கேரக்டர் பெயர் அமுதா. அந்தப் படத்திலிருந்து அங்கே ‘அமுதா’வாகிட்டேன். இப்படி இண்டஸ்ட்ரீக்கு ஒரு செல்லப் பெயர் இருக்குது. பட், ஐ லைக் குமுதா!

மை.பாரதிராஜா