உலகின் நம்பர் ஒன் சிந்தனையாளர்!



இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகை ‘பிராஸ்பெக்ட்’, சமீபத்தில் 2020ம் ஆண்டின் உலகின் மிகச் சிறந்த 50 சிந்தனையாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலைத் தயாரிக்க 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து கேட்டுள்ளனர்.

இதில் முதலிடம் பிடித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் கேரளாவின் சுகாதாரத் துறை அமைச்சரான கே.கே.சைலஜா. டாப் 50 சிந்தனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியரும் இவரே. கொரோனா காலத்தில் சிறப்பாக சிந்தித்து செயல்பட்டதால் அவருக்கு இந்தப் பட்டம். நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கே இரண்டாம் இடம்தான் கிடைத்துள்ளது.

முதல் பத்து இடங்களில் ஏழு பெண்கள் இடம் பெற்றிருப்பது ஹைலைட். டாப் 50 சிந்தனையாளர்களில் 23 பேர் பெண்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் டாப் 100 சிந்தனையாளர்களின் பட்டியலை ‘பிராஸ்பெக்ட்’ வெளியிட்டபோது 10 பெண்கள் மட்டுமே பட்டியலில் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

த.சக்திவேல்