வலைப்பேச்சு



@தமிழ்ச்செல்வி தி - மாணவர்கள் தேர்வைக் கண்டு பயப்படலாமா?
என்ன செய்யறது, நாட்டையே ஆளும் அஞ்சா நெஞ்சர்கள் கூடத்தான் பத்திரிகையாளர்களைக் கண்டு பயப்படறாங்க!

@Mugil Siva நீங்கள் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு நாங்கள் சுதந்திரம் கொடுத்துள்ளோம் என்பர் அகங்காரப் புன்னகையுடன்.

@Deepa Janakiraman புது வீட்டுக்கு மாறியிருக்கிறோம். மயூராவும் மித்ராவும் பிறந்ததில் இருந்து தங்களுடையது என நினைத்திருந்த ஒரு வீட்டினை விட்டு வந்துள்ளோம். வீடு மாற்றும் அனுபவம் ஒவ்வொன்றிலும் உடனிருந்தார்கள். நமக்கு வீடென்பது நினைவுகளும் உணர்வுகளும்; குழந்தைகளுக்கு சுவர்களும், ரகசியமாகக் கிறுக்கிய இடங்களும்.

ஒவ்வொரு பொருளாக வண்டியில் ஏற்று கிறபோது வீட்டின் வெறுமை எங்கள் முகத்தில அடித்தது. குழந்தைகளுக்கோ ஒளிந்துகொள்ளத் தேர்ந்தெடுத்த இடங்கள் எல்லாம் உதிர்ந்ததாகத் தோன்றியது. புது வீட்டில் இது போல ஒளிந்து கொள்ள இடவசதியிருக்குமா என்பது அவர்களின் கவலை. வீட்டின் பொருட்களே ரகசிய இடங்களை உருவாக்குகின்றன என்பதை அவர்கள் இந்த நேரம் அறிந்து கொண்டிருப்பார்கள்.

ஒளிந்துகொள்ள எல்லோருக்குமாக ஏதேனும் தேவைப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. சிறுவயதில் நான் ஒளியத் தேர்ந்தெடுத்திருந்த இடங்களை அவர்களுக்குச் சொன்னேன். புதுவீட்டில் நீங்கள் எங்கு ஒளிந்து கொள்வீர்கள் என்று கேட்டார்கள். ‘பெரியவர்கள் ஒளிந்து கொள்ள வெளியில் இடங்களைத் தேடுவதில்லை...’ என்றேன். புரிந்தது போலத் தலையாட்டிக் கொண்டார்கள்.

@Paadhasaari Vish wanathan ‘‘ஏனிப்ப இந்த வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டுட்டு செய்யறீங்க? நான் செய்யச் சொன்னனா... அதையெல்லாம் நல்லாத் தேய்ச்சு கழுவணும்... வெய்யுங்க... வெலகுங்க நீங்க...’’ எனக் கணவனைக் கரிசனமாக அதட்டுவார் மனைவி.

‘‘ஒரு வேலையும் செய்யறதில்லை... பொறுப்பே கிடையாது... வீடுன்னு ஒண்ணுலே கொஞ்சமாவது அக்கறை இருந்தாத்தானே..? படிச்சிட்டா ஆச்சா..?’’ என்னும் தனது வழக்கமான திட்டலுக்கு கொஞ்ச நாட்களாக இடம் கொடுக்காமல் வேலைகளை எடுத்துக்கட்டி கணவன் செய்யும்போது மனையாட்டிக்கு கிளம்புகிறது ஒரு கரிசனம்!

@Sen Balan அண்ணன் பையன் டாக்டர்
சித்தப்பா பொண்ணு டாக்டர்
பெரியக்கா மக டாக்டர்
நண்பன் பையன் ரேடியாலஜிஸ்ட்
எதிர்வீட்டு தம்பி டாக்டர்
என் க்ளோஸ் பிரண்ட் டாக்டர்
- இப்படி ஏதாவது ஒரு மருத்துவரை உறவு முறையாக சொல்ல முடியாத குடும்பங்கள் தமிழ்நாட்டில் குறைவு. இதுதான் தமிழ்நாட்டு மருத்துவக் கல்வியின் வெற்றி.

@Krishna Prasath  பெரும் பகைக்கும் ஆழ்ந்த நட்பிற்கும் ஒரு புன்னகைதான் இடைவெளி.

@erode_kathir புரிந்துகொள்ள மறுக்கும் முட்டாள்களைத் தவிர்க்க, சமாளிக்க எளிய வழி, அவர்களை ஏதோ ஒரு பதட்டத்திற்குள் தள்ளிவிட்டுவிட்டு சற்று நகர்ந்து நிதானமாக நின்று கொள்ளுதல்.

@R.c. Mathiraj அவ்வப்போது மனதை கல்லாக்கிக் கொண்டதெல்லாம் போய்... மனதை கல்லாகவே மாற்றிவிடும் போல இந்தக்காலம்.

@teakkadai1 ‘டிவி பார்த்தா கண்ணுக்கு கெடுதி, படிப்பு போயிடும்’னு சொல்ல ஆரம்பிச்சு, இப்போ ‘எந்நேரமும் மொபைல் கேம் ஆடாத, ஹெல்த் அபெக்ட் ஆகும். டிவி எவ்வளோ வேணுமின்னாலும் பாரேன்’னு சொல்ல வச்சிருச்சு விஞ்ஞான வளர்ச்சி.

@Kaalachakram Narasimmaa - இதுவரை கோட்டையில் முதல்வர்களாக இருந்த யாருமே தொடர்ந்து இருமுறை முதல்வர்களாக இருந்ததில்லை.
இருவரைத் தவிர - எம்ஜிஆர், ஜெயலலிதா.1980 தேர்தலில் வெற்றிபெற்ற எம்ஜிஆர் மீண்டும் 1984 தேர்தலில் வெற்றி பெற்று கோட்டைக்கு திரும்பினார். ஆட்சியை முடிக்காமல் 1987ல் காலமானார்.2011 தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா மீண்டும் 2016 தேர்தலில் வெற்றி பெற்று கோட்டைக்கு திரும்பி, ஆறு மாதங்களில் காலமானார்.

@Ram Vasanth  எங்க வீட்லயும் எல்லா தமிழர்கள் வீடு மாதிரியே கடந்த 50 ஆண்டுகளாக சக்கரை பொங்கல் என்கிற ஸ்வீட்டைதான் பொறந்த நாளுக்கு பண்றாய்ங்க. புள்ளைக்காவது பெங்காலி வம்சத்துல பொண்ணு கட்டோணும்!

@Balaji Vasu - 10th Student: நான் நல்லாப்படிச்சு, பெரிய டாக்டராகி, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பேன்...
கொரோனா: அடி செருப்பால... நீ பாஸானதே என்னாலதான்!

@RagavanG - நாட்டுல உண்மையிலேயே எங்க ரொம்பஅவதி அவதியா நுழைவுத்தேர்வு தேவைப்படுதுன்னா... அது நீதிபதி பதவிக்குத்தான். கொஞ்சமும் தரமே இல்ல.

@சாத்வீக சைத்தான் - இந்த உலகத்தில் எல்லாருக்கும் இடமுண்டு. ஆனால், யாரிடம் அதிகாரம் உண்டு என்பதுதான் அந்த இடம் உண்டா இல்லையா என்பதை முடிவு செய்கிறது.

@Bilal Aliyar நிறுத்தி வச்ச வண்டிய நாலு மணி நேரம் எடுக்காம இருந்தா... நீங்களா முடிவு பண்ணிட்றதாடா!

@Saranya Satchidanandam ‘ஷால் போடுங்க சகோதரி’ க்ருப்பெல்லாம் சொல்லி வைத்தாற் போல் நீட் கெடுபிடியில் ஒன்றான பெண் மாணவர்கள் சுடிதார் ஷாலை கழட்டி வைத்துவிட்டு தேர்வெழுதச் சொல்வதைப் பற்றி வாய் திறக்கவில்லை... இதுவே பப், கிளப்கள்ல டாப்ஸ், பேன்ட் பெண்களை மீடியா வீடியோ எடுத்திருந்தா மானம் போகுதுன்னு அலறியிருப்பாய்ங்க!

@Aruna Raj ‘ம்மா சட்னி உங்களுக்கு இருக்கா? எனக்கே வைக்கறீங்க நெறையா...’
‘இருக்கு கண்ணா, நீ சாப்பிடு. பத்தலைன்னா அம்மா பொடி வச்சு சாப்பிட்டுக்கறேன்...’
அவன் சாப்பிட்டு முடித்துவிட்டு வந்தபிறகு நான் சாப்பிட ஆரம்பித்தேன்.

‘எங்கிட்ட ஏம்மா சொல்லலை?’
‘என்னது?’
‘குருமா இருக்குன்னு...’
‘டேய்! இது நேத்து நைட் வச்சது கண்ணா...’
‘ஆனாலும் இது குருமாம்மா! நான் பொடி வச்சு சாப்டுக்கறேன்னு என்கிட்ட பாவமா சொல்லிட்டு இங்க நீங்க மட்டும் குருமா சாப்பிடறீங்க?’

@Sam Nathan - Diet, Paleo, Intermediate diet, Fitness, Yoga, Gymming, Marathon என எக்கச்சக்கமாக சொல்கிறார்கள். யார் இது குறித்து பேசினாலும் அவர்கள் உடலை உற்றுப் பார்க்கிறேன். நைஸாக சிரிக்கிறேன்!

@Karl Max Ganapathy  இதுவரைக்கும் ரஜினி அவரோட ரசிகர்களுக்கு போட்ட உத்தரவுகளை மட்டும் தொகுத்து புக்கா போட்டா 30 ஆயிரம் பக்கங்கள் வரும்!

@அ. பாரி - அம்மா வீட்டில் பார்க்கிற நம்ம பொண்டாட்டியை, நம்ம வீட்டிலும் பார்க்க முடிந்தால் எவ்வளோ நல்லாயிருக்கும்?! எவ்வளோ நல்ல பொண்ணா இருக்கா எம் பொண்டாட்டி..! பார்க்கப் பார்க்க ஆசையா இருக்குன்றேன்!

@Shruthi R - ‘உன் கூட நூறு வருஷம் வாழணும்’னு பொண்ணு சொன்னாலே ‘பொய்தான்’னு இன்னும் மொன்ன காமெடி பண்ணிட்டு இருக்கானுங்க.
Relationshipனா ரெண்டு பேர் personalனு புரியாது... கூட இருக்கிறவங்களுக்கு space கொடுக்கணும்னு புரியாது... ஒருத்தங்க எங்க எல்லை மீறி toxic ஆக behave பண்றாங்களோ அங்க விலகல் இயற்கைனு புரியாது... இது எல்லாம் புரியவே ரெண்டு மூணு உறவு முறிவை கடக்கணும்னு புரியாது... ஒரு எழவும் புரிஞ்சுக்க தெரியலைனாலும் கும்பலா போய் பொண்ணுங்கள திட்டிக்கிட்டு இருக்கானுங்க... உங்களுக்கு என்னதான்டா பிரச்னை?!

@Solitary Reaper  ஒரு சீஸ் வழியும் பர்கரை அல்லது சாக்லேட் சிப்ஸ் தாராளமா தூவப்பட்ட ஒரு செழுமையான ஐஸ்க்ரீமை பார்க்கும்போது நாக்கு ஊறி ஜொள்ளு உடாம, ‘அய்யடா எவ்ளோ கலோரி’னு நினைக்க ஆரம்பிச்சுட்டீங்கன்னா நாதஸ் திருந்திட்டான்னு அறிக...அன்னைலருந்து நல்ல காலம்தான்..!