DATA CORNER



நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு காலத்தில் இருந்த நிலைக்குழுக்கள், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசின் கீழ் இருந்ததை விட 145.5 மணி நேரம் குறைவாகவே கூடியுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகக்கண்டிப்புடன் இருந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறைவான பெண்களே பேறுகால சுகாதார சேவைகளை அணுகியுள்ளனர். அதாவது ஜனவரி மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் 5,80,000க்கும் குறைவான பிரசவங்களே மருத்துவமனையில் நடந்துள்ளன.  
NHM - HMIS தரவுகளின்படி இந்த கொரோனா காலகட்டத்தில் 6.9 கோடிக்கும் குறைவான புற நோயாளிகளே வந்துள்ளனர்.  

இந்திய சிறை புள்ளி விவரங்களின்படி 10ல் 7 பேர் விசாரணைக் கைதிகள், 3ல் ஒருவர் தலித் /ஆதிவாசி.அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் 95.6% பேருக்கு பொது நூலக அமைப்பு சேவைகளை வழங்குவதோடு, ஆண்டுதோறும் 35.96 டாலர் செலவழிக்கிறது. இந்தியாவில் பொது நூலகங்களின் வளர்ச்சிக்கான தனிநபர் செலவு வெறும் 7 பைசாதான்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), பொது சுகாதார செலவினங்கள் 1.28% ஐ கடக்கவில்லை.அதிகபட்ச செவிலியர் பணி காலியிடம் உள்ள மாநிலம் ஜார்க்கண்ட் (75%). அதைத் தொடர்ந்து சிக்கிம் (62%), பீகார் (50%), ராஜஸ்தான் (47%), அரியானா (43%). இதில், ஒன்றைத்தவிர (ராஜஸ்தான்) மற்ற மாநிலங்கள் இப்போது பாஜக மற்றும் கூட்டணியினரால் ஆளப்படுகிறது.

மருத்துவ அதிகாரி களின் காலியிடம் அதிகளவில் உள்ள மாநிலம் பீகார் (64%). அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (58%), ஜார்க்கண்ட் (49%), சட்டீஸ்கர் (45%), மணிப்பூர் (43%) ஆகியவை  உள்ளன. தமிழ்நாடு (8%).

அன்னம் அரசு