சிறுகதை - மகளிர் தினம்



‘‘நான் தயாரா இருக்கேன்...’’ என்றாள் ஷிவாங்கி.

அதற்காகவே காத்திருந்தது போல சுறுசுறுப்பாக இயங்கத் துவங்கினான் அந்த இளைஞன். அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளனும், தொகுப்பாளனும் அவன்தான். ஓளிப்பதிவாளனிடம் சென்று கோணம் சொல்லி விட்டு ஒளி சரியாக இருக்கிறதா என்பதைத் திரையில் பார்த்து திருப்தி கொண்டவனாக நடந்து சென்று ஷிவாங்கிக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி. வருடா வருடம் இறந்து போனவர்களுக்குத் திதி செய்வது போல இதுவும் ஒரு சடங்கு என்று எண்ணிக் கொண்டான். பெண்ணியம் பற்றி அவனுக்கென தனி கருத்துகள் இருந்தாலும் நிகழ்ச்சி தயாரிப்பாளனாக வழக்கமான சமரசங்கள் செய்துதான்
ஆக வேண்டும். அதனால் குறைந்த பட்சம் ஷிவாங்கியை பேட்டி எடுத்தாவது தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றுதான் கொஞ்சம்  சிரமப்பட்டு இந்த நேரத்தை வாங்கியிருக்கிறான்.

சமீபகாலமாக தனது பெண்ணிய எழுத்துக்களால், திறந்த வெளிப்படையான கருத்துக்களால் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தார் ஷிவாங்கி.
அவர் எழுதியது பாதி பேருக்குப் புரியவில்லை அல்லது பாதி பேர் புரிந்து கொண்டதுபோல் நடித்தார்கள் என்று ஒரு பரவலான குற்றச்சாட்டு வைத்தபோதும் அவரது கவிதைகளில் வெளிப்பட்ட சில வார்த்தைகள் ஒன்றும் புரியாத ஒன்றரையணா கவிஞர்களுக்குக் கூடப் புரிந்தன.

சமூகப் பண்பாட்டுக் காவலர்கள் அந்த வார்த்தைகளால் கலாசாரம் சீரழிந்துவிடுமென்று கூப்பாடு போட்டார்கள் - இதுவரை கலாசாரம் சீரழியவே இல்லை என்பது போல. இன்னும் கொஞ்சம் பேர் அவரது பெயரை சூசகமாக தங்களது படைப்புகளுக்குள் செருகிக் கொண்டு அவரைத் திட்டித் தீர்ப்பதன் மூலம் தங்கள் உள் அரிப்பைச் சொறிந்து கொண்டு சுகமாக வாழத் தலைப்பட்டார்கள்.

சில பெண் கவிஞர்கள் தங்களது ‘பெண்ணிய’ முத்திரையை இன்னொரு கவிஞர் தட்டிப் பறித்ததால் ஏற்பட்ட கடும் கோபத்தில் அவரை அறம்
பாடினார்கள். இப்படி எல்லாருக்கும் அவரைப் பற்றிச் சொல்ல ஏதாவது இருந்ததால் அவரது படைப்புகளில் வெளியில் அதிர்ச்சியையும் உள்ளுக்குள் கிளுகிளுப்பையும் தந்த வார்த்தைகளைக் கொண்ட கவிதைகளை மட்டும் வெளியிட்டு வெகுஜனப் பத்திரிகைகள் தங்கள் கவிதையார்வத்தை மக்களுக்குப் பறைசாற்றின.

சிலர் ‘இப்படி எழுதலாமா?’ என்று கேள்வி எழுப்பி சாய்ந்துவிட்ட சமூகத் தூணைத் தூக்கி நிறுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
இவை எல்லாமும் சேர்ந்து கொண்டதால் ஷிவாங்கி என்ன எழுதினாலும் தமிழ்ச்சமூகம் அதைக் கவிதையாக ஏற்றுக் கொள்ள முன்வந்தது. இவை கிறுக்கல்கள் என்று ஒருசாரார் சொன்னால், நவீனவாதிகள் பொங்கியெழுந்து அவரை ஆதரித்தார்கள். நவீனவாதிகளுக்குப் பிடிக்காமல் போனால் நவீனவாதிகளின் எதிர்முகாம் மேடைகளில் ஷிவாங்கிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தமிழ்க்கவிதைச் சமூகத்தின் பெண்ணியக் குரலாகவே மாறிவிட்ட ஷிவாங்கியை அந்த தனியார் தொலைக்காட்சி மட்டும் விட்டு வைக்காமல் இருந்தால் எப்படி? இந்தப் பொறுப்பை ஷிவாங்கியின் கவிதைகளை வாசித்து அவரது ரசிகனாகவே மாறியிருந்ததால் தானாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டான் அவன்.வழக்கமான அறிமுகம். பேசிக் கொண்டிருக்கும்போதே இலகுவாக கால்மேல் கால் போட்டுக் கொண்ட ஷிவாங்கியை
அதிசயமாகப் பார்த்தான்.

பொது இடங்களில் இப்படி இருந்தால் அவளைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்? ஒரு பிரபல எழுத்தாளர் கூட அதற்கு வேறு ஒரு ‘மாதிரி’யான விளக்கமொன்றை திரைப்படமொன்றில் கொடுத்திருந்தது நினைவுக்கு வந்ததும் சிரிப்பு வந்துவிட்டது அவனுக்கு. நல்ல வேளையாக காட்சியில் அவன் இல்லை.‘‘பெண் விடுதலை’ பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’‘‘பெண்ணுக்கு எதற்காக விடுதலை வேண்டும்? யாரிடமிருந்து விடுதலை வேண்டும்? ஏன் முதலில் தன்னை ஓர் அடிமையாக எண்ணிக்கொள்ள வேண்டும்?

அடிமையாக இருப்பவனுக்குத்தான் விடுதலை குறித்த யோசனை வர வேண்டும்! நாம் பிறக்கும்போதே பெண்கள் அடிமைகள் என்ற எண்ணத்தை ஆழமாகப் பெண்களிடம் பதிக்கிறோம். பெண் விடுதலை வேண்டுமென்று முழங்கும் பெண்ணியம் பேசும் ஆண்களின் எண்ணம் கூட பெண்ணை ஒரு அடிமையாகக் கருதுவதை உணர்வுபூர்வமாக வெளிக்காட்டிக் கொள்வதுதான்.

அப்படி ஒரு நிலையிலிருந்தே பெண் சமூகம் விடுபட வேண்டும். அப்படி இல்லாமல் விடுதலை என்று பேசுவதே முரண்பாடான விசயம்தான்...’’
‘‘அதெப்படி அவ்வளவு தீர்மானமாகச் சொல்கிறீர்கள்?’’‘‘இதில் தீர்மானமென்று சொல்ல என்ன இருக்கிறது? ஒரு குழந்தை பிறந்தால் அதைக் குழந்தையாகக் கருதாமல் பால் வித்தியாசம் பார்க்கத் துவங்குகிறீர்கள் அல்லவா? அதிலிருந்து உங்கள் பார்வை மாறத் துவங்குகிறது.

பெண் என்பவள் பெற்றவர்களின் பார்வையிலேயே அநியாயத்துக்கு செக்குமாட்டு மனப்பான்மைக்குள் புகுத்தப்படுகிறாள். காது குத்துவது, மூக்கு குத்துவதென்று தொடங்கி அவள் பருவம் வந்தாலும் ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட்டு என் பெண் குட்டி போடத்தயாராகி விட்டாள் என்று வெளிச்சம் போடுவதிலிருக்கும் கிறுக்குத்தனங்கள் ஏதும் இல்லாமல் எப்படி ஓர் ஆண் பருவமெய்துவதை யாரும் கண்டுகொள்ளாமல் விடுகிறீர்களோ அதைப்போல கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்.

அவளை உடல் ரீதியாகப் பிரித்து மேய்வதை முதலில் நிறுத்துங்கள். அதன் பின் பெண் அடிமை என்பதைப் பற்றிப் பேச வழியே இருக்காது!’’
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சமூகத்தின் அடித்தளத்திற்கே வேட்டு வைக்கச் சொல்கிறார். ஷிவாங்கி சொன்னார் என்பதற்காக யாரும் கேட்டு விடப் போவதில்லையென்றாலும் ஒரு சிலருக்காவது அவரது செய்தி போய் சேர்ந்தால் கூட வரும் காலங்களில் இதுபோன்ற எண்ணங்கள் துளிர்க்கவாவது செய்யுமென்ற எண்ணம் வந்தபோது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

பேட்டிக்காக அந்தக் கொடும் வெப்பமுதிர்க்கும் விளக்குகளுக்கு முன்னால் இருந்ததால் தெப்பலாக வியர்த்து முதுகுப்பக்கம் சட்டை நனைந்திருந்தது. தனக்கே இப்படியென்றால் ஷிவாங்கிக்கும் அதே பிரச்னை இருக்குமென்பதை உணர்ந்தவனாக சிறிய இடைவேளையை அறிவித்தான்.
விளக்குகள் அணைந்து மின்விசிறி சுழன்றபோது கிடைத்த சூடான காற்று கூட அந்த நேரத்தில் உற்சாகம் தருவதாக இருந்தது.

இவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கும் இந்தக் கவிஞரிடம் இனி என்ன கேட்க வேண்டுமென்ற எண்ணம் உள்ளுக்குள் சுழலத் துவங்கிய நேரத்தில் கேட்டது அந்தக் குரல்.‘‘எத்தனை தடவைடி உன் கிட்ட சொல்றது... பக்கத்து வீட்டு ஆம்பளப் பசங்க கூட வெளயாடாதேன்னு. இன்னும் சின்ன புள்ளன்னு நெனப்பா. வளந்துகிட்டு வர்றேங்குற அறிவு வேணாம்?’’ ஷிவாங்கி தன் மகளிடம் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்.
மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிக்கு அவன் மீண்டும் தயாரானான்.

கீர்த்தியை காதலிக்கும் ராஷ்மிகா!

கார்த்தியின் ‘சுல்தான்’ நாயகி ராஷ்மிகா மந்தனா, அடுத்தும் தமிழில்தான் சிறகடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியோடு கைகோர்த்திருக்கிறார். என்றாலும் எந்த பந்தாவும் பண்ணாமல் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து பொக்கே நீட்டுகிறார் ராஷ்மிகா. ‘‘நேத்து ‘பெண்குயின்’ பார்த்தேன். கீர்த்தியோட பர்ஃபாமென்ஸ் எப்போதும் போல பிர்லியண்ட்...’’ என மனதார வாழ்த்துகிறார்.  

ஹன்சி... சோகம் ஸி!

லாக் டவுனில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகைகளில் ஹன்சிகாவுக்கு ஸ்பெஷல் இடமுண்டு. தமிழில் அவர் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கும் டைமில் லாக் டவுன் வந்துவிடவே, இப்போது மும்பை வீட்டிலேயே கிடுகிடுக்கிறார். எப்போதோ ஆரம்பித்த அவரது யூ டியூப் சேனலுக்கு ஐம்பதாயிரம் சப்ஸ்க்ரைபர்கள் குவிந்துவிட, பரபரப்பாகிவிட்டார் ஹன்சி. இந்த குவாரண்டைனில் தனக்கு எப்படி பொழுது போகிறது என்பதையே வீடியோவாக தட்டிவிட்டிருக்கிறார்.

அவரவர் கஷ்டம்!

சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்குமோ என பலரும் கன்னத்தில் கை வைத்து காத்திருக்க. ‘படப்பிடிப்பு துவங்கி விட்டால், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுமா’ என்ற கவலையில் இருக்கிறார் வைபவி சாண்டில்யா.

சந்தானத்தின் கண்டுபிடிப்பான இவர், ‘‘ஷூட்டிங் தொடங்கினா, முத்தக் காட்சி இருக்குமா? கட்டி பிடிச்சு நடிக்கணுமா என்கிற பயத்தை விட, ஒரு நடிகைன்னா அவங்களுக்கு மேக்கப் டீம், ஹேர் டிரெஸ்சர்னு அவங்கள சுத்தி ஐந்தாறு பேராவது இருப்பாங்க. சினிமாவில் இதெல்லாம் தவிர்க்க முடியாது. கொரோனா டைமில் இதையெல்லாம் சமாளிக்கறது சவால்தான்...’’ என பெருமூச்சு விடுகிறார்.

- ஆசிப்மீரான்