ஒரு பெண்ணை எப்படி இம்ப்ரஸ் பண்ணணும்..? டிப்ஸ் தருகிறார் மேகா ஆகாஷ்



கௌதம்மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வுக்கு பிறகு அவர் இயக்கிய ‘ஒரு சான்ஸ் கொடு’ மியூசிக் வீடியோவில் காதலில் உருகியவர் மேகா ஆகாஷ். நம்ம சென்னை கேர்ள். சுந்தர்.சியின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திலும் கிளாமரில் சிறகடித்த சிட்டு. இப்போது ‘ஒரு சான்ஸ் கொடு’
யூடியூப்பில் வெளியாகி இருபது லட்சம் பார்வையாளர்களை கவர்ந்ததில் மேகா, ஹேப்பியோ ஹேப்பி.  

என்ன சொல்றார் கௌதம்மேனன்..?

சின்ன வயசில இருந்தே ஆக்ட்டிங்கில் எனக்கு ஆர்வம். எதனால நடிப்பில் இன்ட்ரஸ்ட்னு சொல்லத் தெரியல. ஸ்கூல், காலேஜ்ல எல்லாரும் ‘டாக்டர் ஆகணும்... என்ஜினீயர் ஆகணும்’னு சொன்னப்ப, நான் ‘ஆக்ட்ரஸ் ஆவேன்’னு சொல்லியிருக்கேன்!எங்க அம்மாகூட நான் ஏதோ விளையாட்டா சொல்றேன்னு நினைச்சிருக்காங்க. சென்னை டபிள்யுசிசிலதான் காலேஜ் படிச்சேன். படிக்கும் போதே மாடலிங். அப்பவும் ‘நடிப்பு எனக்கு பிடிக்கும்’னு சொல்வேன். எல்லாருமே என்னை கிண்டல் பண்ணியிருக்காங்க. ஆனா, அது எதையும் நான் கண்டுக்கல.

என் குறிக்கோள்ல சரியா இருந்தேன். எடிட்டர் ஆண்டனி மூலமா கௌதம் சார் அறிமுகமானார். ஆடிஷன் கூப்பிட்டார். போட்டோ ஷூட் பண்ணினாங்க. அப்புறம் எதுவும் சொல்லல. மறுபடியும் ஆடிஷன் வைச்சாங்க. படத்துல உள்ள ஒரு சீனை கொடுத்து நடிக்கச்
சொன்னாங்க. நடிச்சேன்.கேமரா முன்னாடி நடிக்கறப்ப நான் மேகாவா இல்ல. அந்த கேரக்டரா மாறினேன். இந்த ஃபீலே எனக்கு ஆக்ட்டிங் மேல இன்ட்ரஸ்ட் அதிகரிக்க காரணமா இருக்கு. அன்று மாலையே, ‘நீங்க செலக்ட் ஆகிட்டீங்க’னு சொன்னார் கௌதம். அவரோட ஒர்க்கிங் ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். செம சில்ட் அவுட் பர்சன். அவரோட படங்கள் எல்லாத்திலும் இருக்கணும்னு விரும்புறேன்!   
உங்க லைஃப்ல லவ் உண்டா?

நிச்சயமா! எல்லார் லைஃபிலும் லவ் உண்டு. அம்மா, அப்பானு நம்மள நேசிக்கறவங்களை லவ் பண்ணிட்டுத்தானே இருக்கோம்!
கண்டதும் காதல்ல நம்பிக்கையுண்டா?உண்டு. சில நேரம் யாரையாவது பார்த்தா, சில செகண்ட்ஸ் அவங்களைப் பார்க்கத் தோணும். ஆனா, எனக்கு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டை விட, அவங்களோட பழகின பிறகுதான் லவ் ஃபில் வரும்.
ஒரு பெண்ணை இம்ப்ரஸ் பண்ண டிப்ஸ் சொல்லுங்க..?

அது அவ்ளோ ஈஸியில்ல. அவளுக்காக டைம் கீஃப் அப் பண்ணுங்க. காத்திருக்க வைக்காதீங்க. வெயிட்டிங் எரிச்சலை தரும். அப்புறம், அடிக்கடி சர்ப்ரைஸ் பண்ணுங்க. உங்க மீதான ப்ரியத்தை அதிகரிக்கும். அவ பர்த்டேக்கு மட்டுமல்ல... சின்னச் சின்ன விஷயங்களுக்கும் கூட கிஃப்ட் கொடுங்க.
இன்னொரு முக்கியமான விஷயம், ‘சாப்டியா?’, ‘இன்னிக்கு ஏன் டல்லா இருக்கே... உனக்கு என்னாச்சும்மா..?’
இப்படி கேரிங்கா இருங்க.

எல்லாத்தையும் விட, செய்யக்கூடாத விஷயங்களும் சிலது உண்டு. யாரையும் யாரோடவும் ஒப்பிடாதீங்க. கம்பேரிஷன் எந்தப் பொண்ணுக்கும் பிடிக்கவே பிடிக்காது. அதைப் போல உங்க கேர்ள் ஃப்ரெண்ட்கிட்ட உங்க கடந்த கால வாழ்க்கையையோ இல்ல, உங்க எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட் பத்தியோ பேசாதீங்க. அதையெல்லாம் தெரிஞ்சுக்க எந்த பொண்ணும் விரும்ப மாட்டா.

அடுத்த பாயிண்ட், ‘அதைப் பண்ணாத, இதைப் பண்ணாத’னு ரெஸ்ட்ரிக்ட் பண்ணினா, இம்ப்ரஸ் பண்ணவே முடியாது!
இது எல்லாத்தையும் விட, ரொம்ப ரொம்ப முக்கியமானது, யாரையும் எந்தக் காரணம் கொண்டும் குறைச்சு மதிப்பிடாதீங்க. பெண்கள் ரொம்ப ஸ்டிராங்க். ஒரு பொண்ணு நினைச்சா, இந்த உலகத்தையே மாத்த முடியும்னு நான் நம்புறேன்.  

உங்களுக்கு யாரை லவ் பண்ணத் தோணியிருக்கு..?
ஷாருக்கான்! என்னா ஒரு ஹேண்ட்ஸம். அவரைப் பார்த்தாலே லவ் பண்ணத் தோணும். இன்னொருத்தரையும் சொல்லணும். ஆனா, லவ்னு சொல்ல முடியாது. எம்.எஸ்.தோனி! இந்தியன் டீமுக்கு அவர் ஆட வந்ததிலிருந்து அவரைப் பிடிக்கும். ஆனா, நான் இன்னமும் சிங்கிள்தான்!                 

மை.பாரதிராஜா