அண்டர் கிரவுண்ட் வீடுகள்!



உலகிலேயே அதிகளவில் மாணிக்கக் கல்லை கொண்ட இடம் கூப்பர் பெடி. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சிறிய நகரம் இது. வறண்ட பாலைவனம் போல காட்சியளிக்கும் கூப்பர் பெடியில்தான் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற திரைப்படமான ‘மேட் மேக்ஸ் 3’ன் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. 
முதன் முதலாக 1915ம் வருடம் இங்கே மாணிக்கம் இருப்பதாக கண்டுபிடித்தனர். அன்றிலிருந்து உலகுக்கு மாணிக்கத்தை அள்ளி வழங்குகிறது கூப்பர் பெடி.

விஷயம் இதுவல்ல. மாணிக்கத்தை எடுப்பதற்காக கூப்பர் பெடியின் பல இடங்களில் சுரங்கங்களைத் தோண்டியுள்ளனர். அந்த சுரங்கங்கள் எல்லாம் இன்று வீடுகளாக, கடைகளாக, பார்களாக மாறிவிட்டன!

ஆம்; கூப்பர் பெடியில் வெயில் சுட்டெரிக்கும். சில நேரங்களில் 120 டிகிரிக்கு எகிறிவிடும். நிலத்தின் மேல் வீட்டைக்கட்டி வாழ்வது கடினம். அதனால் அண்டர் கிரவுண்ட்டில் வீடுகளை அமைத்து மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்த குகை வீடுகளில் மின்சார வசதி இருப்பது ஹைலைட்.

த.சக்திவேல்