ஒயின் குயின் ராஷ்மிகா!இனிப்பா... உப்பா... ஃபிப்டி ஃபிப்டி காம்பினேஷன் போல இருக்கிறார் டோலிவுட்டின் துறுதுறு விறுவிறு ஏஞ்சல், ராஷ்மிகா மந்தனா. அங்கே மகேஷ் பாபுவிலிருந்து விஜய் தேவரகொண்டா வரை டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸ் இவர்தான். இப்போது கோலிவுட்டிலும் ஜொலிக்கிறார்.

எஸ். கார்த்தியின் ‘சுல்தான்’ ஜோடி. தவிர, அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமாகும் ‘புஷ்பா’விலும் ராஷ்மியின் ராஜ்ஜியம்தான்.
‘‘நான் பெங்களூரு பொண்ணு. கன்னடத்திலும், தெலுங்கிலும் எனக்கு ரொம்பவே சப்போர்ட்டா இப்பவும் இருக்காங்க. அங்க படங்கள் பண்றப்ப, கோலிவுட்டிலிருந்து ‘நீங்க தமிழுக்கு எப்ப வரப்போறீங்க’னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க.

இப்ப கார்த்தி சாரின் ‘சுல்தான்’ மூலம் தமிழுக்கும் வந்துட்டேன். இங்கயும் நல்ல சப்போர்ட் எனக்கு கிடைக்கும்னு உறுதியா நம்பறேன்!’’ மிஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் பொண்ணு, ஃப்ரெஷ் சிரிப்பில் மலர்கிறார்.

எப்படி போகுது லாக் டவுன்..?

ஹையோ! வீட்லயே இருக்கேன். நடிக்க வந்த பிறகு, நாம வீட்டை ரொம்பவும் மிஸ் பண்றோம்னு ஒரு ஃபீல் இருந்துகிட்டே இருந்தது. இனி ஜென்மத்துக்கு அப்படி ஒரு ஃபீல் வராத அளவுக்கு இப்ப ஹோம் டே கிடைச்சிருக்கு!ஒரு இண்டர்வியூல, ‘ஆளே இல்லாத தீவுல உங்கள விடப் போறாங்க... அப்ப நீங்க கையோடு ரெண்டு பொருட்களைக் கொண்டு போகலாம்னு அனுமதிச்சா எந்தெந்த பொருட்களைக் கொண்டு போவீங்க’னு கேட்டாங்க. இதுக்கு பதிலா, ‘போர்வையும், தலையணையும்’னு சொல்லியிருந்தேன்.

இப்ப வீட்ல தீவு மாதிரிதான் இருக்கேன். ஆனா, தூங்கவே டைம் கிடைக்கல! வீட்டையே ஜிம்மா மாத்தி, ஃபிட்னஸ் ஒர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சிட்டேன். வாட் நெக்ஸ்ட்னு கேள்வி வந்துட்டே இருந்தது. யோகா, புக்ஸ், மியூசிக்னு அடுத்தடுத்து எனக்கு நானே டைட் ஷெட்யூல்ஸ் போட்டுகிட்டேன்.

அப்புறம் பார்க்க நினைச்ச எல்லா வெப் சீரிஸும் பார்த்துட்டேன்! Dark, Money Heist, Friends, Something in the Rain, I can go on.., Crashlanding on You..னு எதையும் விடலை! கடைசியா டேட்டிங் போனது எப்ப?

ஏதாவது உளறிட்டா பிரச்னையாகிடுமே! சில வருஷங்களா சிங்கிளாதான் இருக்கேன். ஸோ, லாஸ்ட் டேட் ஞாபகத்துக்கு வரலப்பா..! ஆனா, சொல்றதுக்கு நிறைய லவ் ஸ்டோரீஸ் உண்டு. எல்லாமே ஒன்சைடு லவ்ஸ்தான்.

சிங்கிள் பசங்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?

நிறைய கனவு காணுங்க. ஆனா, அந்த கனவு நனவாக... அதுக்கு வடிவம் கொடுக்க... நிறைய யோசிங்க. மத்தவங்க உங்க லைஃபை
கண்ட்ரோல் பண்றா மாதிரி நடந்துக்காதீங்க. மத்தவங்க உங்கள கட்டுப்படுத்தாம இருந்தாதான், உங்க வாழ்க்கையை நீங்களே வாழமுடியும்! இதை புரிஞ்சவன் பிஸ்தா!

உங்கள நினைச்சு நீங்களே பெருமைப்படும் விஷயம் எது?

சந்தேகமே இல்லாம என்னோட பொறுமையை நினைச்சு, நான் ரொம்ப பெருமைப்பட்ட... பெருமைப்படும் தருணங்கள் உண்டு.
ஆல்கஹால் பிடிக்குமா?

நோ! ஆனா, ஒயின் பிடிக்கும். அதுவும் ரெட் ஒயின்னா ரொம்ப இஷ்டம். பட், இதெல்லாம் எப்பவாவதுதான்!உங்களைப்பத்தி ஒரு
சீக்ரெட் சொல்லுங்க?

இது நல்லா இருக்கே.. நீங்களே சீக்ரெட்னு சொல்லிட்டீங்க.. அப்புறம், அதை சீக்ரெட்டாதானே வச்சுக்கணும்!   

மை.பாரதிராஜா