சந்தேகம்



அன்று மாலையே சுசீலாவின் கார் லெமன் ட்ரீ ஹோட்டலில் நிற்பதை நிகில் செல்போன் ஜிபிஎஸ்ஸில் காட்டியது.இவ்வளவு சீக்கிரம் இதை நிகில் எதிர்பார்க்கவில்லை.தன் முயற்சி வெற்றி பெற்றதற்கு சந்தோஷமும், மோஸஸ் சொன்னது உண்மையோ என்று கோபமும் கலந்த மனநிலை நிகிலுக்கு ஏற்பட்டது. உடனே ஆபீசிலிருந்து கிளம்பினான்.

காருக்கு வெளியே சாலையிலும் நடைபாதையிலும் எல்லாமே கலைடாஸ்கோப்பாகத் தெரிந்தது.நேற்று இதே நேரம்தான் மோஸஸ் போனில் அழைத்தான்.“இது ரொம்ப சென்ஸிடிவான விஷயம். நாம வழக்கமா மீட் பண்ற பார்ல இந்த விஷயத்தை பேசினா எமோஷனலாய்டுவ. போதைல ஏதாவது விபரீதங்கள் நடக்க சான்ஸ் இருக்கு. அதனாலதான் ரெஸ்டாரண்ட் கூப்பிட்டேன்டா...”“விஷயத்தை சொல்லுடா...”

“உன் வைஃப் சுசீலாவுக்கு வேற ஒரு அஃபையர்; இருக்குடா...” மோஸஸ் நேரடியாக அப்படி சொன்னதும் நிகில் அதிர்ந்து போனான். கைகள் நடுங்கியது. எடுத்த காபி கோப்பையை மீண்டும் டேபிளில் வைத்தான்.அந்த டிரைவ் இன் ரெஸ்டாரண்டில் அந்த நேரம் யாருமில்லை. அருகிலிருந்த மரத்தில் குடியிருந்த இரண்டு பறவைகளின் கீச் கீச் மொழியை ரசிக்கும் மனநிலை நிகிலுக்கு அப்போது இல்லை.

“என்னடா உளர்றே. நான்சென்ஸ்...” என்றான் நிகில் சத்தமாக. “அவ சென்னைல நம்பர் ஒன் ஈவன்ட் மேனேஜ்மன்ட் கம்பெனி சிஇஓ. வியாபார ரீதியா நாலு இடத்துக்குப் போவா… நாலு பேரை மீட் பண்ணுவா. அதை வெச்சு எப்படி…”“டென்ஷனாகாத மச்சான். கூல். நானும் உன்னை மாதிரி ஒரு மல்ட்டி நேஷனல் பேங்க்ல மார்க்கெட்டிங் மானேஜர். எனக்கும் நாலு விஷயங்களை பிரிச்சிப் பார்க்கத் தெரியும்...”நிகில் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும் மோஸஸ் சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.

“பீச், ஹோட்டல், பப்ல, வீக் எண்ட் டிஸ்கோதேனு எல்லா இடத்துலயும் ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்திருக்கேன். அப்புறம்தான் அவனைப் பத்தின டீடெய்ல கலெக்ட் பண்ணேன். லீடிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி சிஇஓ. உன் பொண்டாட்டி நடத்தற ஈவென்ட்ஸுக்கு அவன் கம்பெனிதான் முக்கிய ஸ்பான்ஸர். பேரு ஜெயராம். சுசீலாவை விட ரெண்டு வயசு சின்னவன்.”நிகில் அதிர்ந்து போயிருந்தான்.

“வாரத்தில் ஏதாவது ஒரு நாள் லெமன் ட்ரீ ஹோட்டல்ல சாயங்காலம் ஆறு டூ ஒன்பது ரூம் போட்டு தங்குவாங்க. நாம் பன்னிரெண்டு வருஷ ஃப்ரெண்ட்ஸ். உன் மேல் இருக்கற முழு அக்கறைலதான் இவ்வளவு டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணேன். எந்த முடிவும் எடுக்கும் முன்பு நீயும் உன் சைடுல செக் பண்ணிக்கோ...”“எனக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு விபரங்கள் சேகரிச்சு சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்டா...”
“சுசீலாவுக்கு அஃபையர் இருக்கறது உறுதியானா அவளை விவாகரத்து பண்ணிடுவியாடா..?”

“கொலை பண்ணிடுவேன்...” என்றான் நிகில் கடுமையான குரலில்.மோஸஸ் அதிர்ந்து போனான்.நேற்றிரவு சுசீலா படுக்கை யறைக்குள் நுழைந்த போது மணி 10.30.மங்கலான ஆரஞ்சு நிற இரவு விளக்கு அறையை நிறைத்திருந்தது. சுவரிலிருந்த டிவி ம்யூட்டில் ஓடிக் கொண்டிருந்தது.
நிகில் தூங்காமல் கண்கள் மூடி படுத்திருந்தான். சுசீலா மின்ட் பாடி ஸ்ப்ரே வாசத்துடன் தொம்மென்று நிகில் மேல் விழுந்தாள். நிகில் முகத்தைத் திருப்பி உதட்டில் முத்தமிட்டாள்.

“இன்னைக்கு வேண்டாம் சுசீ. டயர்டா இருக்கு...”
“எத்தனை மாசமாச்சு தெரியுமா நிகில்?”
“ஆபீஸ் ப்ரஷர். மூட் ஆஃப். டயர்ட். லீவ் மீ ப்ளீஸ்...”
சுசீலா எதுவும் சொல்லாமல் பக்கத்தில் படுத்தாள்.

நேற்று இரவு எதுவும் நடக்காததால்தான் சுசீலா இன்றே ஹோட்டலுக்கு வந்துவிட்டாளா என்று நிகிலுக்கு தோன்றியது. கார், ஹோட்டலை நோக்கி தானாக விரைந்து கொண்டிருந்தது.காலையே சுசீலாவின் கள்ளத்தொடர்பை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினான் நிகில். பலன் மாலையே கிடைத்துவிட்டது.அதிகாலை. நிகில் ஜாக்கிங் சூட்டில் இருந்தான்.

அந்த புதிய ஸ்மார்ட் போனில் புது சிம் கார்டைப் பொருத்தினான். மொபைலை சைலன்ட் மோடில் வைத்தான். ஜிபிஎஸ் லொகேஷன் ஆக்டிவேட் செய்தான். அந்த போனின் ஜிபிஎஸ் லொகேஷனை தன் மொபைலுடன் இணைத்தான். சுசீலாவின் கார் பின் சீட்டின் அடியில் மறைவாக அந்த புதிய ஸ்மார்ட் போனை வைத்தான்.ஜாக்கிங் கிளம்பினான்.

லெமன் ட்ரீ ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் எலுமிச்சை நிற சீருடை அணிந்திருந்தாள்.“மிஸ்டர் ஜெயராம் எந்த சூட்டில் தங்கியிருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாமா?” நிகில் சரளமான ஆங்கிலத்தில் கேட்டான்.“சுபீரியர் சூட். நெம்பர் 474. உங்கள் பெயர் சொல்லுங்கள். இப்போது அவர் உங்களைச் சந்திக்க விரும்புகிறாரா என்று கேட்டுச் சொல்கிறேன்...” இன்டர்காம் ரிஸீவரை கையில் எடுத்துக் கொண்டு கேட்டாள்.

“முதலில் நானே அவரிடம் கேட்பதுதான் மரியாதை. அப்புறம் நீங்கள் அனுமதி பெற்றுக் கொடுங்கள்...”
நிகில் செல்போனை எடுத்து டயல் செய்வது போல் லிப்ட் அருகில் போனான். ரிசப்ஷனிஸ்ட் வேறு பக்கம் திரும்பியதும் சடாரென லிப்டுக்குள் நுழைந்தான்.அறை எண் 474 கதவு கொஞ்சமாக திறந்திருந்தது. உள்ளே சுசீலாவின் குரல் சத்தமாகக் கேட்க கதவருகிலேயே நின்றுவிட்டான் நிகில்.
“பிஸினஸ் டிஸ்கஷனுக்கு எத்தனையோ தடவை இங்கே கூப்பிட்டு பேசியிருக்கீங்க. இன்னைக்கு உங்களுக்கு என்னாச்சு ஜெயராம்? ஏன் இப்படி என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணீங்க?”

“ஸாரி சுசீலா. இன்னைக்கு ஏதோ ஒரு செகண்ட் சபலத்துல அப்படி நடந்துகிட்டேன்...” ஜெயராம் கெஞ்சலாக சொன்னான்.
“எப்ப உங்களுக்கு என் மேல தவறான எண்ணம் வந்துச்சோ இனி உங்களோட எந்த பிஸினஸ் கான்ட்ராக்டும் எனக்கு வேண்டாம்...”
“அப்படியெல்லாம் சொல்லாதே சுசீலா. இனிமே இந்த மாதிரி தப்பு…”“நடக்க கண்டிப்பா வாய்ப்பிருக்கு மிஸ்டர் ஜெயராம். என் உயிரே போனாலும் என் புருஷனுக்கு நான் துரோகம் பண்ணமாட்டேன். இனி உங்க மூலமா எங்க கம்பெனிக்கு எவ்வளவு கோடி வந்தாலும் அது எனக்கு தேவையில்லை...”
சுசீலா பேசிக் கொண்டிருந்ததை கதவருகிலிருந்து கேட்ட நிகில் கலங்கிப் போனான். மோஸஸ் சொன்னதை நம்பி எனக்கு உண்மையாக இருக்கும் என் சுசீலாவை சந்தேகப்பட்டுவிட்டேனே. ச்சே. ஸாரி சுசீ.

அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல் நிகில் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.வெளியே ஷூ காலடி தேயும் சத்தம் கேட்டு சுசீலா மெல்ல நடந்து கதவருகில் வந்து எட்டிப்பார்த்தாள். நிகில் லிப்ட் நோக்கி நடந்து கொண்டிருந்தான்.அறைக் கதவை மூடிய சுசீலா திரும்பி ஜெயராமைப் பார்த்து கண்ணடித்துப் புன்னகைத்தாள்.

“ஜிபிஎஸ் லொகேஷன் வெச்சி என்னை ட்ராக் பண்ணி கையும் களவுமா பிடிக்க ப்ளான் பண்றானாம். ஒரு சாதாரண பேங்க் மேனேஜரான இவனே இவ்வளவு யோசிச்சா… ஒரு கம்பெனி சிஇஓ எனக்கு எவ்வளவு அறிவு இருக்கும். ஜிபிஎஸ் லொகேஷன் ட்ராக் அலர்ட் ஆப்பை என் மொபைல்ல இன்ஸ்டால் பண்ணி வெச்சிருக்கேன். என்னை சுத்தி ரெண்டு மீட்டர் ரேடியஸ்ல தொடர்ந்து அஞ்சு நிமிஷம் ஒரே டிவைஸ்  ஜிபிஎஸ் லொகேஷன் ஆன்ல இருந்தா எனக்கு அலர்ட் மெஸேஜ் வந்துடும்.”

“யாராவது என்னை கேட்டா உடனே எனக்கு இன்ஃபார்ம் பண்ணச் சொல்லி ரிசப்ஷன்ல சொல்லி வெச்சதும் நல்லதாப் போச்சு டார்லிங்...”
“டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் ஜெய். இன்னிக்கு சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்...”சுசீலா ஓடி வந்து அவன் மடியில் அமர்ந்து கட்டிக்கொண்டாள். ஜெயராம் சுசீலாவின் கழுத்தில் முத்தமிட்டான்.

ஸ்பெஷல் மாஸ்க்!

லாக் டவுனில் கலிபோர்னியாவில் புன்னகைக்கிறார் பிரியங்கா சோப்ரா.கணவர் ஜோனஸுடன் இணைந்து உலக சுகாதார அமைப்புக்காக மியூசிக் ஷோ நடத்தி வரும் ப்ரியங்கா, ‘‘போன வருஷம் இதே மாசம், கேன்ஸ் ஃபெஸ்டிவல்ல பங்கேற்றேன்...’’ என மலரும் நினைவுகளில் கண்சிமிட்டுகிறார். தவிர, கொரோனாவுக்காக மாஸ்க் அணிவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அவர் அணியும் மாஸ்க்குகள் எல்லாம் அவரது ஃபேஷன் & ஸ்டைலிஸ்ட் டிசைனர் ஸ்பெஷலாக வடிவமைப்பதாம்!

பிளாஸ்டிக் பிந்து

குஷியில் மிதக்கிறார் பிந்து மாதவி. இந்தியில் அவர் நடித்த ‘மிஸ்டிஸ்’ வெப் சீரிஸை 95 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்களாம்.
பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் புது போட்டோ ஷூட் ஒன்றையும் க்ளிக்கியவர், ‘‘பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டுவதினால் உலகம் முழுவதும் நூறு மில்லியன் கடல்வாழ் உயிரினங்கள் இறக்கின்றன. நாம் சுவாசிக்கும் காற்றின் நச்சுத்தன்மையும் அதிகரிக்குது...’’ என அக்கறை மெசேஜும் உதிர்க்கிறார்.

பிரபு பாலா