காதல் சொல்ல வந்தேன்!காதல் சொல்ல டைம், டேட் எல்லாம் தேவையா? கேர்ள் ஃபிரண்டின் மனசு மாறுவதற்குள் டக்கென காதலுக்கான போர்டிங் பாஸ் வாங்கி லைஃபில் நுழைவதுதான் நவீன ஜென் ஸ்டைல். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த KPIX 5 டிவி ரிப்போர்ட்டரான எமிலி டர்னர் - மரியன் கவுண்டி பகுதியில் காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ள இடங்களைப் பற்றி அக்கறையாக பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு அருகில் வந்து நின்ற தனது பாய் ஃப்ரெண்ட் ஆன டேனியல் போவெனை ஆச்சரியமாக பார்த்தார் எமிலி. சர்ப்ரைஸாக உடனே ‘‘எமிலி உன்னை மேரேஜ் செய்ய ஆசை..!’’ என பரபரவென காதல் சொல்லி ரிங்கையும் விரலில் மாட்டி விட்டார். ஆனந்தக்கண்ணீர் வழிய மேடம் எமிலி பரவசமானது கேமராவிலும் பதிவானது. அப்புறம்தான் டிவியைச் சேர்ந்த டீமே இந்த டிராமாவுக்கு உறுதுணை என எமிலிக்கு தெரிந்திருக்கிறது!