கைகுலுக்கினால் எய்ட்ஸ்!ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என சுற்றிவரும் தகவல்கள் நிஜமா, பொய்யா என்றே அனுப்புபவருக்கும் தெரியாதபடி, பலருக்கும் ஷேர் ஆவது இன்றைய ட்ரெண்ட். இந்நிலையில் பஞ்சாப் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (PSACS) பஞ்சாபியில் வெளியிட்ட நோட்டீஸ் ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது. கைகுலுக்கினால், நோயாளி பயன்படுத்திய போன், பாத்திரங்கள், கம்ப்யூட்டரை, டாய்லெட்டை பயன்படுத்தினால் எய்ட்ஸ் வரும் என திகில் புளுகு செய்திகள் அதில் இருந்தன.

அரசு இப்படி செய்தி வெளியிடலாமா என அசல் இந்தியனாய் பலருக்கும் ஷேர் செய்ய நானோ செகண்டில் இந்தியாவே பீதியானது. பிறகுதான் அது 2014ம் ஆண்டு பிரிண்ட் செய்த நோட்டீஸ் என தெரிந்திருக்கிறது. ‘‘ஒரு லட்சம் நோட்டீஸ்களை தவறாக அச்சடித்துவிட்டோம். பிழைகளை கண்டுபிடிப்பதற்கு முன்பே 5,800 நோட்டீஸ்கள் பல மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டதுதான் பிரச்னை...’’ என்கிறார் எய்ட்ஸ் தடுப்பு சங்க இயக்குநர் பவன் ரேகா பெரி.