பாத்டப் கார்!



சாதாரணமாக பிராக்டிக்கலாக ஓட்ட முடியாத கார்களை கான்செப்ட் கார் என்ற பிரிவில் உருவாக்கி அதை கார் கம்பெனிகள் கண்காட்சியில் வைப்பார்கள். அவர்களையும் மிரட்சிக்குள்ளாக்கி காரை ஸ்பெஷலாக மாற்றி உலகையே உற்றுப்பார்க்க வைத்திருக்கிறார் டெக்னாலஜி பித்தர் ஒருவர். தாறுமாறு கண்டுபிடிப்பாளரான கோலின் ஃபர்ஸ், புது இன்வென்ஷன்ஸை இடைவேளை இன்றி நிகழ்த்தவேண்டும் என மாரத்தான் கனவு காண்பவர்.

அவரிடமிருந்த பழைய பிஎம்டபிள்யூ 3 காரை மேலும் கீழுமாக பார்த்தவர், உடனே கான்க்ரீட் முடிவு எடுத்தார். வாட்டர் ப்ரூஃப் காரில் நீரை நிரப்பி, எஞ்சின் காயில்களை நீரில் போட்டு சூடாக்கி, சிம்பிளாக பாத் டப்பாக காரை மாற்றி விட்டார் கோலின். காரிலிருந்து நீர் வெளியே கசியாமலிருக்கவும் தன் டெக்னாலஜி அறிவை பயன்படுத்தி அவர் குளியல் போடும் வீடியோ, இணையத்தில் தாறுமாறு ஹிட் அடித்திருக்கிறது.