செல்ஃபீ கல்யாணம்!மேரேஜ் செய்ய பக்கா வேவ்லென்த்தில் இன்று சரியான ஜோடி கிடைப்பது ஈஸி டாஸ்க்கா என்ன? இத்தாலி லேடி லாரா மெசி இதுபோன்ற சிச்சுவேஷனில் செம தில் முடிவு எடுத்திருக்கிறார்.  இங்கிலாந்தைச் சேர்ந்த நாற்பது வயது மாடல் பெண் லாரா, பனிரெண்டு ஆண்டு ரிலேஷன்ஷிப் முறிந்தவுடன் இன்ஸ்டன்ட்டாக தன்னைத்தானே செல்ஃப் கல்யாணம் செய்துகொண்டார். இல்லீகல் திருமணமான இதற்கும் 70 கெஸ்ட்டுகள் வந்திருந்து ஃபங்ஷனை பரவசப்படுத்தியுள்ளனர்.

‘‘என் ஃப்யூச்சர் இன்னொருவரை சார்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. திருமணத்திற்காக என் வாழ்வின் சந்தோஷத்தை தியாகம் செய்ய முடியாது. எனவே என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் அறிவித்துவிட்டே என்னை நானே திருமணம் செய்துகொண்டேன்!’’ என அதிரடியாக நாளிதழில் தில் பேட்டி கொடுத்தது பலரையும் ஷாக் அடிக்க வைத்திருக்கிறார்!