வானில் நிறவெறிநிலத்தில்தான் நிறம், சாதி ரீதியான ஏற்றத்தாழ்வு என்று ஃபிளைட் ஏறினால் வானிலும் பிரச்னைகள் சூறாவளியாக தொடங்கிவிட்டன. பிரிட்டிஷ் ஏர்வேய்ஸைச் சேர்ந்த பணிப்பெண் ரிலீஸ் செய்த வீடியோவும் அந்த ரகம்தான். ஹீத்ரூவிலிருந்து அபுஜா செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸில் டூட்டி பார்த்த பணிப்பெண் வெளியிட்டுள்ள ஸ்நாப்சாட் வீடியோதான் ஆல் இன் ஆல் பிரச்னைக்கு காரணம்.

இதில் ‘‘நைஜீரியர்கள் கொஞ்சம் அப்டேட்டாக வேண்டும். வெள்ளிக்கிழமை இவர்களுக்கு சிக்கன், பீஃப் என தருவதுதான் என் வேலையா?’’ என்ற ரீதியில் ஆங்கிலப் பட சப்டைட்டில்களில் வரும் ஸ்டார் வார்த்தைகளைப் பயன்படுத்தி நைஜீரியர்களின் உடலைக் குறிப்பிட்டதுதான் சர்ச்சைக்கு காரணம். இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலாக, விமானநிறுவனம் பணிப்பெண்ணின் மீது என்கொயரி செய்வதாக அறிவித்துள்ளது.