ஏர்போர்ட்டில் ஜாலி டான்ஸ்!ஏர்போர்ட்டில் விமானத்திற்காக வெயிட்டிங். ஃபிளைட் லேட். விமானம் கிடைக்காததால் அனைத்து வேலைகளும் கடலில் பிளாஸ்டிக் போல தேங்கும் டென்ஷன். அந்த சிச்சுவேஷனை ஜாலி டான்ஸால் ஒரு பெண் சூப்பராக சமாளித்திருக்கிறார். அமெரிக்காவின் சார்லட் டக்ளஸ் ஏர்போர்ட்டுக்கு மஷித் மஸூஜி என்ற பெண் வந்து சேர்ந்தபோது அவரின் ஃப்ளைட் விண்ணில் கிளம்பியிருந்தது. வேறுவழியின்றி நைட் அங்கேயே நகம் கடித்தபடி காத்திருந்தவருக்கு கிடைத்தது சூப்பர் ஐடியா.

லயனல் ரிட்சியின் ‘ஆல் நைட் லாங்’  என்ற பாடலுக்கு ஜாலியாக ஆடத்தொடங்க, அங்கிருந்த ஊழியர்களும் அதில் இணைய... டான்ஸ் உற்சவம் அள்ளு கிளப்பியது. இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டவர், ஏர்போர்ட் ஊழியர்களுக்கு டன் கணக்கில் நன்றி சொல்லி நெக்குருகியிருக்கிறார்.