Sky Tree!



ஜப்பானின் மிக உயரமான டவர், ஸ்கை ட்ரீ. புர்ஜ் கலீபாவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய டவரும் இதுதான். தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி, ஒளிபரப்பு இங்கு முக்கியமாக நடக்கிறது. 9 டிவி சேனல்களும், 5 வானொலி நிலையங்களும் இருக்கின்றன. 634 மீட்டர் உயரம் கொண்ட இந்த டவர் டோக்கியோ நகரில் உள்ள சுமைடாவில் அமைந்துள்ளது.

பூமி அதிர்வைத் தாங்கும் இந்த டவரில் ஓர் இடம் உள்ளது. 450 மீட்டர் உயரம் உள்ள அந்த இடத்தின் சுவர்கள் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும். ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பேர் அங்கே நிற்க முடியும். அங்கிருந்து டோக்கியோ நகரின் அழகைத் தரிசிப்பது தனி அனுபவம். இந்த டவருக்குள் நுழையக் கட்டணம் செலுத்த வேண்டும். 2012ல் ஸ்கை ட்ரீ திறக்கப்பட்டது. முதல் வாரத்திலேயே 16 லட்சம் பேர் ஸ்கை ட்ரீயை பார்க்க குவிந்து விட்டனர்!

த.சக்திவேல்