கடலில் மிதக்கும் எவரெஸ்டை விட 3 மடங்கு பெரிய பனிப்பாறை!
மூன்று வருடங்களுக்கு முன்பு அண்டார்க்டிகாவிலிருந்து ராட்சத பனிப்பாறை ஒன்று உடைந்து தனியாகப் பிரிந்தது. அதற்கு ‘A-68’ என்று பெயர் வைத்தனர். எவரெஸ்ட் சிகரத்தை விட மூன்று மடங்கு பெரியது அந்தப் பனிப்பாறை. 5,800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள அப்பாறையின் எடை மட்டுமே ஒரு டிரில்லியன் டன்.
ஆழமற்ற கடல்பகுதியின் ஓர் இடுக்கில் சிக்கிக்கொண்டிருந்த இப்பனிப்பாறையால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. இப்போது அந்தப் பனிப்பாறை கடல் பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதாக ‘நாசா’வின் செயற்கைக்கோளில் பதிவாகியிருக்கிறது.
ஆம்; பனிப்பாறையின் முனைப்பகுதிகள் உருகியதால் கடல் இடுக்கில் இருந்து விடுபட்டு நகர ஆரம்பித்துள்ளது. ஒருவேளை இந்தப் பனிப்பாறை முழுவதும் உருகி கடலில் கலந்துவிட்டால் கடல்மட்டம் வெகுவாக உயர்ந்துவிடும். கடற்கரையில் இருக்கும் பல ஊர்கள் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
த.சக்திவேல்
|